மகா சிவராத்திரியை குறிவைக்கும் மாஸ்டர் படக்குழு.. செகண்ட் சிங்கிளை யார் எழுதி இருக்கா தெரியுமா?
சென்னை: மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி 18 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது.
தளபதி விஜய் குரலில் வெளியான இந்த பாடல் உலகளவில் டிரெண்டாகி வருகிறது. மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக செகண்ட் சிங்கிளை மகா சிவராத்திரிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்ற தகவலும் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனர்ஜி தருது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் விஜய் குரலில் வெளியாகி ரசிகர்கள், மாணவர்கள் மற்றும் வேலையில் டென்சனாக இருப்பவர்களின் டென்சனை குறைத்து பாசிட்டிவ் எனர்ஜியை தந்து வருகிறது.

ஆடியோ லாஞ்சுக்கு வெயிட்டிங்
மாஸ்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலாகி உள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சுக்காக மாஸ்டர் படக்குழுவும், தளபதி ரசிகர்களும், ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும், குட்டி ஸ்டோரி பாட்டைத் தொடர்ந்து, ஆடியோ லாஞ்சில் விஜய் என்ன ஸ்டோரி சொல்லப் போகிறார் என்பதை கேட்க தமிழ்நாடே காத்திருக்கிறது.

மகா சிவராத்திரி
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும், ஒவ்வொரு பண்டிகைக்கு வெளியான நிலையில், மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு மகா சிவராத்திரி ஸ்பெஷலாக வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிரிக்ஸ் யாரு?
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என காத்து வாக்குல ரெண்டு காதல் பட இயக்கத்தில் பிசியாக இருக்கும் விக்னேஷ் சிவன் தான் செகண்ட் சிங்கிளை எழுதியுள்ளதாகவும், இந்த பாடல் விஜய் ரசிகர்கள் ஆட்டம் போடும் விதமாக செம குத்து பாடலாக இருக்கும் என்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

பேக்கப் எப்போ?
நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங், தற்போது சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 28ம் தேதியுடன் மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாம். வரும் ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











