அண்ணன் வந்தா ஆட்டம் பாம்.. வாத்தி கம்மிங் ஒத்து.. மாஸ்டர் செகண்ட் சிங்கிள் தெறிக்குது!

சென்னை: மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிளான 'வாத்தி கம்மிங்' தற்போது வெளியாகி உள்ளது.

மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து, தளபதி விஜய்யின் 64வது படமான மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

பிப்ரவரி இறுதியில் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், வரும் மார்ச் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மாஸ்டர் படக்குழு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

வாத்தி கம்மிங்

அனிருத் இசையில், உருவாகி உள்ள வாத்தி கம்மிங் பாடல், தர லோக்கல் குத்து பாடலாக அமைந்துள்ளது. கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் விஜய் ஆடும் மாஸ் ஓபனிங் பாடலாக வாத்தி கம்மிங் பாடல் அமைந்துள்ளது. "வாத்தி கம்மிங் ஒத்து.. அண்ணன் வந்தா ஆட்டம் பாம்" என மாஸ்டர் செகண்ட் சிங்கிள் லிரிக் வீடியோ தெறிக்குது.

ராக்ஸ்டார்

ராக்ஸ்டார்

கத்தி படத்திற்கு பிறகு, மீண்டும் நடிகர் விஜய் படமான மாஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து விஜய் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வந்த நிலையில், ராக்ஸ்டார் அனிருத், தளபதி ரசிகர்களை கவரும் விதமாக ரொம்ப யங்காகவும் எனர்ஜியாகவும் இருக்கும் ட்யூன்களை போட்டுள்ளார்.

காக்கா பாலா

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதி, நடிகர் விஜய் பாடியிருந்த நிலையில், வாத்தி கம்மிங் எனும் மெர்சலான பாடலை கானா பாடகர் காக்கா பாலா எழுதியுள்ளார். வாத்தி கம்மிங் பாடல் வெளியாகும் சில நிமிடங்களுக்கு முன்னதாகத் தான் இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

மாஸ்டர் இசை

மாஸ்டர் இசை

ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற உள்ளது. சன் டிவியில் லைவ் டெலிகாஸ்டாக ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்து கிடக்கின்றனர்.

வருமான வரி சோதனை

வருமான வரி சோதனை

பிகில் படம் கடந்த ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை பெற்ற நிலையில், பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன், தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மற்றும் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தற்போது, மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.

பேசக் கூடாது

பேசக் கூடாது

பிகில் இசை வெளியீட்டு விழாவில், பேசியது போல நடிகர் விஜய் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், அசத்தலாகவும் அரசியல் கருத்துக்களையும் பேசக் கூடாது என்ற நோக்கத்துடன் தான் தொடர்ந்து, இதுபோன்ற வருமான வரித்துறை சோதனை மிரட்டல்கள் எழுவதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஏப்ரல் ரிலீஸ் சாத்தியமா?

ஏப்ரல் ரிலீஸ் சாத்தியமா?

மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், மார்ச் மாதம் மற்றும் ஏப்ரல் மாதம் எந்த ஒரு புதிய படமும் வெளியாகுமா? என்ற கேள்வியும், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போகலாம் என்றும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X