விஜய் கன்னத்தை காட்ட.. விஜய் சேதுபதி முத்தம் கொடுக்க.. மாஸ்டர் ஷூட்டிங்கும் ஓவராம்!

சென்னை: மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில், எனக்கு ஒரு முத்தம் கொடு நண்பா என விஜய் கேட்க, விஜய் சேதுபதி கொடுத்த முத்த புகைப்படத்தையும் வெளியிட்டு, தளபதி ரசிகர்களுக்கு சரியான சனிக்கிழமை பார்ட்டியை கொடுத்துள்ளனர்.

மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, இப்படியொரு சூப்பரான அப்டேட்டை கொடுத்து அசத்தியுள்ளனர்.

சொன்ன மாதிரியே

பிப்ரவரி இறுதிக்குள் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் என ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொன்னது போலவே, நிகழ்த்தியும் காட்டி உள்ளார். மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் இன்றுடன் நிறைவடைந்தது என்ற அறிவிப்புடன், ரசிகர்களுக்கு ஸ்வீட் கொடுப்பது போல, விஜய்க்கு விஜய்சேதுபதி கொடுத்த முத்த புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி எதிர்பார்த்த படியே ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாகும் என தளபதி ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தவறாமல் அப்டேட்களை கொடுத்து வரும் மாஸ்டர் படக்குழுவே விரைவில், இசை வெளியீட்டு விழா தேதி மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்து விடும்.

கண்ணே பட்டுடும் போல

தளபதி விஜய்க்கு, மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கொடுத்த அன்பு முத்த புகைப்படத்தை படக்குழு சரியான நேரத்தில் வெளியிட்டு, அதகளப் படுத்தி உள்ளது. மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட்டுக்கான தேதி வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இப்படியொரு இன்பதிர்ச்சியை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.

எது சூப்பர்?

நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் போது, நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படமா? அல்லது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, விஜய்க்கு கொடுத்துள்ள முத்த புகைப்படமா? எது சூப்பர் என்ற வித்தியாசமான விவாதத்தையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். ரெண்டுமே சூப்பர் தான் பாஸ் என பதிலும் வருகின்றன.

மில்லியன் டாலர் பிக்

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, தளபதி விஜய்யின் கன்னத்தில் அன்பாக இடும் முத்த புகைப்படம் ரசிக்ரகளுக்கு கூஸ் பம்ப்ஸை கிளப்பியுள்ளது. இதுதான் ரியல் மில்லியன் டாலர் பிக் என இந்த தளபதி ரசிகர் வெறித்தனமான ஒரு மீமை போட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் ட்வீட்

சனிக்கிழமை நைட் அப்டேட்டை கொடுத்து தீயாய் பரவ விட்டா என்ன? என மாஸ்டர் அப்டேட் வருவதற்கு சற்று முன்னதாக ஜகதிஷ் ப்ளிஸ் ட்வீட் போட்டிருந்தார். அந்த ட்வீட்டை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ், Can't wait! என கமெண்ட் செய்ய, தளபதி ரசிகர்கள் மேலும், சந்தோஷம் அடைந்துள்ளனர். பைரவா, சர்கார் என இரு முறை விஜய்யின் ஹீரோயினாக நடிச்சவராச்சே..

வாவ் எல்லாமே தெறிக்குதே

மாஸ்டர் செல்ஃபியில் தொடங்கி, அனிருத்தை கட்டிப் பிடித்தபடி விஜய் கொடுத்த போஸ் மற்றும், தற்போது, விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி முத்தம் கொடுக்கும் போட்டோ என ஒவ்வொரு புகைப்படமும் வெறித்தனமாக தெறிக்குதே என விஜய் ரசிகர்கள் ட்விட்டரை மொத்தமாக ஆட்சி செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X