ஆட்டம் ஆரம்பம்.. ஒரு குட்டி கதை வெய்ட்டிங்.. மாஸ்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recommended Video

Oru Kutty Kadha | Master Movie Update | Thalapathy Vijay | Lokesh Kanagaraj

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த தகவலை சோனி மியூஸிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவர்கள் தவிர ஷாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா ஜெர்மையா ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் மாஸ்டர் படத்திற்கு இசையமைக்கிறார்.

ரசிகர்களுடன் செல்பி

ரசிகர்களுடன் செல்பி

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்காளக நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் ஷுட்டிங் நடைபெற்றது. இந்த ஷுட்டிங் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு விஜயை காண ரசிகர்கள் என்எல்சி பகுதியில் குவிந்தனர். அப்போது அங்கிருந்த பேருந்தின் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் நடிகர் விஜய்.

பிப். 14ஆம் தேதி முதல்

அந்த போட்டோக்களும் வீடியோக்களும் வைரலாகி சமூக வலைதளங்களை திணறடித்தது. இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.அதாவது மாஸ்டர் படத்தின் முதல் பாடல் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. இதனை சோனி மியூஸிக் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதல் சிங்கிள்

முதல் சிங்கிள்

இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ள சோனி நிறுவனம் ஆட்டம் ஆரம்பம் என்றும் ஒரு குட்டி கதை வெய்ட்டிங்.. அந்தக் கதை பிப்ரவரி 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு சொல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தளபதியின் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கில் ட்ராக் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்

இந்த அறிவிப்பை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் தற்போதே தங்களின் ஆட்டத்தை தொடங்கி விட்டனர். #MasterUpdate என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். 'நெஞ்சில் குடியிருக்கும்னு ஆடியோ லான்ச்ல #தளபதி சொல்றது வெறித்தனம் பாட்டா வந்துட்டு, குட்டி கதைனு ஆடியோ லான்ச்ல தளபதி சொல்றது ஒரு குட்டி கதைனு பாட்டா வரபோகுது. அட்லிக்கு அப்புறம் லோகி என பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X