ஒரு குட்டி கதை.. இன்று வெளியாகிறது மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்.. ரசிகர்கள் மரண வெய்ட்டிங்

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் இன்று மாலை வெளியாகிறது.

பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

Master single track will be released today by 5 pm

விஜய்க்கு வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மேலும் ஷாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா ஜெர்மையா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் ஷுட்டிங் நடைபெற்றது. இந்த ஷுட்டிங் கடந்த 10 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்த முக்கிய அறிவிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது. அதாவது மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் காதலர் தினமான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை சோனி மியூஸிக் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்ட சோனி நிறுவனம் ஆட்டம் ஆரம்பம் என்றும் ஒரு குட்டி கதை வெய்ட்டிங்.. அந்தக் கதை பிப்ரவரி 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு சொல்லப்படும். தளபதியின் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவித்து மாஸ் காட்டியது.

இதனிடையே ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இது. ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் 'செல்பி புள்ள' பாடலை பாடியிருக்கிறார் நடிகர் விஜய்.

பிகில் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடல் பெறும் ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடிகர் விஜய் பாடியிருக்கிறார். படத்தின் பாடல் அறிவிப்பை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எப்போது மணி 5 ஆகும் மாஸ்டர் சிங்கிள் ட்ராக்கை கொண்டாடலாம் என காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X