புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசு கொடுத்த விஜய்.. மாஸ்டர் எமோஜியால் உற்சாகமான தளபதியன்ஸ்!

சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் எமோஜியை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

Recommended Video

சென்னை: விஜய்யின் மாஸ்டர்.. வந்தாச்சு புது போஸ்டர்.. புத்தாண்டு ஸ்பெஷலால் ஹேப்பியான ரசிகர்கள்..!

நடிகர் விஜய் ட்வீட் செய்தால் தான் மாஸ்டர் எமோஜி ரிலீசாகும் என ட்விட்டர் அறிவிக்க, தளபதி விஜய் ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசை கொடுத்துள்ளார்.

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் #MasterPongal, #MasterFilm உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மாஸ்டர் பொங்கல்

மாஸ்டர் பொங்கல்

வரும் ஜனவரி 13ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. வரும் பொங்கல் விஜய் ரசிகர்களுக்கும் தியேட்டர் ஓனர்களுக்கும் மாஸ்டர் பொங்கல் தான்.

விஜய் கோரிக்கை

விஜய் கோரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், 100 சதவீத இருக்கைக்கு நடிகர் விஜய், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தார். நடிகர் விஜய்யின் கோரிக்கையை சீக்கிரமே பரிசீலிப்பதாகவும், பொங்கலுக்கு 100 சதவீத இருக்கைகள் கோரிக்கைக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் பாராட்டு

முதல்வர் பாராட்டு

தனது படத்திற்காக மட்டுமின்றி, தளபதி விஜய் ஒட்டுமொத்த சினிமா உலகுக்காகவும் தான் தன்னிடம் பேசினார் என்றும், கூடிய சீக்கிரம் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி ஓப்பனாகவே பேசிய வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மாஸ்டர் எமோஜி

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ எமோஜியை ட்விட்டர் இந்தியா தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் ட்வீட் போட்டால் மட்டுமே அந்த எமோஜி வெளியாகும் என ட்விட்டர் இந்தியா பதிவிட்ட ட்வீட் ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றது.

விஜய் ட்வீட்

தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுக்கும் விதமாக மாஸ்டர் எமோஜியை ரிலீஸ் பண்ண #MasterFilm @TwitterIndia என ட்வீட் போட்டுள்ளார் நடிகர் விஜய். 2021ம் புத்தாண்டு அதுவுமாக நடிகர் விஜய்யின் ட்வீட்டை பார்த்த தளபதி ரசிகர்கள் அந்த ட்வீட்டையும் ரெக்கார்ட் செய்ய ரீட்வீட் மற்றும் லைக்குகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

மாஸ்டர் டிரைலர் எப்போ?

மாஸ்டர் டிரைலர் எப்போ?

புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் டிரைலர் வெளியாகவில்லை. இன்னும் 13 நாட்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், டிரைலர் வெளியிடாமல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களா என்கிற கேள்வியும் எழுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X