ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. அமேசான் பிரைமில் வெளியானது மாஸ்டர்.. டிரெண்டாகும் #MasterOnPrime

சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 16 நாட்களிலேயே அமேசான் பிரைமில் வெளியாகி விட்டது.

Recommended Video

சென்னை: அமேசானில் வெளியானது மாஸ்டர்…உலகம் முழுவதும் ரசிகர்கள் குஷி!

தியேட்டர் மற்றும் ஒடிடி என நடிகர் விஜய்யின் மாஸ்டர் வேற லெவலில் வெற்றிநடை போடுகிறது.

நள்ளிரவு 12 மணிக்கே அமேசான் பிரைமில் ஏகப்பட்ட ரசிகர்கள் ஒடிடி FDFS போட்டோக்களையும் ட்விட்டர் விமர்சனங்களையும் போட்டு திணறடித்து வருகின்றனர்.

அமேசான் பிரைமில் மாஸ்டர்

அமேசான் பிரைமில் மாஸ்டர்

தியேட்டரில் வெளியாகி 50 நாட்களுக்கு பிறகு மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 16 நாட்களிலேயே அமேசான் பிரைமில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி உள்ளது. கடந்த ஜனவரி 13ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது மாஸ்டர் திரைப்படம்.

தெறிக்கும் ட்விட்டர்

தெறிக்கும் ட்விட்டர்

#MasterOnPrime என்ற ஹாஷ்டேக்கை நேற்று இரவு 10 மணி முதல் இருந்து இன்னமும் விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர். ஒடிடியில் மாஸ்டர் படத்தின் FDFS பார்த்த ரசிகர்கள், அமேசான் பிரைமில் படத்தை பார்த்தபடியே செல்ஃபி எடுத்து பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

நைட் ஷிஃப்ட் கய்ஸ்

நைட் ஷிஃப்ட் கய்ஸ்

நள்ளிரவு 12 மணிக்கு அமேசான் பிரைமில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்யும் நபர்கள், மொபைல் போன்களிலும், லேப்டாப்களிலும் பார்த்தும் பதிவுகளை இட்டு வருகின்றனர். தளபதி ரசிகர்களுக்கு நேற்று இரவு சிவராத்திரி தான். ரிப்பீட் மோடில் மாஸ்டரை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

குழந்தைகள் கொண்டாட்டம்

அமெரிக்காவில் நண்பர் வீட்டில் மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்த்து குழந்தைகள் நடனமாடும் வீடியோவையும் நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் தியேட்டருக்கு குடும்பமாக போக தயங்கியவர்களும் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள மாஸ்டர் திரைப்படத்தை குடும்பமாக உட்கார்ந்து பார்த்து வருகின்றனர்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

மாஸ்டர் ஒடிடி தளத்தில் வெளியானாலும் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல்லாகவே ஓடும் என்றும், தளபதி விஜய் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். பிப்ரவரி 1 முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு தியேட்டர்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரமும் திரையரங்கில் மாஸ்டர் படம் வசூலை குவிக்கும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X