பொங்கல் பண்டிகை ரிலீஸ்.. விஜய்யின் மாஸ்டருடன் மோதும் 3 படங்கள்.. ரெடியாகும் பிரபல ஹீரோக்கள்!
சென்னை: பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டருடன் மேலும் 3 படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக சினிமா துறை மொத்தமாக முடக்கி விட்டது. தியேட்டர்கள் திறக்கப்படாததால், பெரும்பாலான படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.
சிலர், ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். சிலர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்பார்க்கும் படம்
இந்நிலையில் லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, நிறுத்தப்பட்டிருந்த படங்களின் ஷூட்டிங்கை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே, இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

தியேட்டர்கள்
இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். இந்நிலையில், தியேட்டரில் மட்டுமே இந்தப் படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்தது. இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்றாலும் அடுத்த மாதம் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் ரிலீஸ்
தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் உடனடியாக பெரிய படங்களை ரிலீஸ் செய்ய வழியில்லை. இதனால் விஜய்யின் மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. மாஸ்டர் படத்துடன் மேலும் 3 படங்கள் மோத இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

பேராசிரியர் விஜய்
மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் விஜய் பேராசிரியராக நடிக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயின். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன.

பண்டிகை காலத்தில்
கார்த்தியின் சுல்தான் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்துள்ளது. இதன் தயாரிப்பாளர், எஸ்.ஆர்.பிரபு, பண்டிகை காலத்தில் படத்தை வெளியிட முயற்சிப்பதாகக் கூறியிருந்தார். இதனால், இந்தப் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. ஏற்கனவே கார்த்தியின் கைதி படமும் விஜய்யின் பிகில் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருந்தது.
Recommended Video

ராணா, சிம்பு
இதற்கிடையே, பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டக்குபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக நடிகர் ராணா நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











