திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா? வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்!
சென்னை: பாகுபலி 2ம் பாகத்தின் தமிழ்நாடு தியேட்டர் ஷேர்கள் ரெக்கார்டை தளபதி விஜய்யின் மாஸ்டர் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாகத்தான் தற்போது ட்விட்டரில் #Bahubali2 டிரெண்டாகி வருகிறது.
பாகுபலி 2ம் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக வேற எந்த படத்தாலும் அதன் சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்த நிலையில், மாஸ்டர் முறியடித்துள்ளதாக கூறி வருகின்றனர்.

பாகுபலியை முறியடித்த மாஸ்டர்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் பாகுபலி 2ம் பாகத்தின் தியேட்டர் ஷேர்களை விட அதிகமாக வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

முதலிடத்தில் மாஸ்டர்
இதுவரை தமிழ்நாட்டு தியேட்டர் ஷேர்களில் முதல் 5 இடங்களை பிடித்த படங்களில் முதலிடத்தை மாஸ்டர் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் பாகுபலி 2, மூன்றாம் இடத்தில் பிகில், 4ம் இடத்தில் சர்கார் மற்றும் 5ம் இடத்தில் விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் இருப்பதாக கூறி வருகின்றனர்.

டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்
திரைப்படங்களை பொறுத்தவரையில் அதன் வசூல் வெளிப்படையாக சொல்லப்படுவதில்லை. ஆனால், கொரோனா காலத்தில் 50 சதவீதம் இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலில் குளோபலி நம்பர் ஒன் என தயாரிப்பு நிறுவனமான சேவியர் பிரிட்டோவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

100 கோடி ராஜா
பாகுபலி 2 படத்தின் தமிழ்நாட்டு வசூலை விஜய்யின் மாஸ்டர் முறியடித்த தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், #Bahubali2 டிரெண்டிங்கை பார்த்த பிரபாஸ் ரசிகர்கள், இந்தியளவில் மட்டுமில்லை உலகளவில் பிரபாஸுக்கு தான் மாஸ் அதிகம். டோலிவுட்டில் சாஹோ 125 கோடிக்கு மேலும், பாகுபலி 120 கோடிக்கு மேலும், வசூல் ஈட்டியுள்ளதாக பிரபாஸ் ரசிகர்கள் சண்டைக்கு வந்துவிட்டனர்.

மீண்டும் டிரெண்டிங்கில் விஜய்
கடந்த மூன்று நாட்களாக தல அஜித் பற்றிய அப்டேட்கள், புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது மீண்டும் டிரெண்டிங்கில் மாஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டு வந்துள்ளனர். மாஸ்டர் படம் பாகுபலி 2வை தமிழ் நாட்டில் முந்தி விட்டது என்பதை ஏற்க மறுத்து அஜித் ரசிகர்களும் ட்ரோல்களை பறக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











