ஓ மை கடவுளே படத்திற்கு ‘மாஸ்டர்’ படக்குழுவிடம் இருந்து இப்படி ஒரு சப்போர்ட்டா!
Recommended Video
சென்னை: காதலர் தினத்துக்கு ஏற்ற சரியான படமாக இன்று வெளியாகி உள்ள ஓ மை கடவுளே படத்திற்கு மாஸ்டர் படக்குழுவின் சப்போர்ட் மற்றும் வாழ்த்துக்கள் கிடைத்துள்ளன.
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் ஓ மை கடவுளே.
இந்த படத்தில் இயக்குநராக கெளதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மேலும், மாஸ்டர் படத்தில் வில்லனாக மிரட்டியுள்ள விஜய்சேதுபதி ஓ மை கடவுளே படத்தில் அந்த கடவுளாகவே நடித்துள்ளார்.

பாசிட்டிவ் விமர்சனங்கள்
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகி உள்ள ஓ மை கடவுளே படத்திற்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த பலரும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி திரைப்படமான இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே வைத்து வருகின்றனர்.

மாஸ்டர் வில்லன்
கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் கடைசியாக சங்கத் தமிழன் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில், 2020 துவக்கத்திலேயே ஓ மை கடவுளே படத்தின் மூலம் ரசிகர்களை குஷிபடுத்த கோட் சூட் போட்ட கடவுளாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். வரும் ஏப்ரலில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக மிரட்ட உள்ளார்.
சாந்தனு ட்வீட்
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் நடிகர் சாந்தனு நடிப்பில் கடந்த வாரம் வானம் கொட்டட்டும் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள ஓ மை கடவுளே படம் சூப்பர் டூப்பர் ஹிட் பெற வாழ்த்துக்கள் என சாந்தனு ட்வீட் செய்துள்ளார்.
படம் பார்க்க வெயிட்டிங்
சாந்தனுவை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் ரைட்டரும் ஆடை படத்தின் இயக்குநருமான ரத்னகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில், ஓ மை கடவுளே படம் குறித்த நல்ல விஷயங்களையே கேள்வி பட்டு வருகிறேன். ரொமான்டிக் படங்களுக்கு தான் ஒரு டை ஹார்ட் ஃபேன், விரைவில் ஓ மை கடவுளே பார்க்க உள்ளேன், வெயிட்டிங் என பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











