மாஸ்டர் சக்ஸஸை துபாயில் மாஸாய் கொண்டாடும் லோகேஷ் அன்ட் அனிருத்.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: மாஸ்டர் படத்தின் வெற்றியை படக்குழுவினர் துபாயில் கோலாகலமாக கொண்டாடிய போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவானது மாஸ்டர் திரைப்படம்.

இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு கடந்த 13ஆம் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

ரூ. 200 கோடி வசூல்

ரூ. 200 கோடி வசூல்

கொரோனா அச்சுறுத்தலையும் மீறி பல திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருந்தது மாஸ்டர் திரைப்படம். மேலும் மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூலை ஈட்டியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

இதனை விஜய் ரசிகர்கள் #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து கொண்டாடினர். தொடர்ந்து ஓடிடி தளத்திலும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதிலும் மாஸ்டர் திரைப்படம் அதிக வியூஸ்களை குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் கொண்டாட்டம்

துபாயில் கொண்டாட்டம்

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றியை படக்குழுவினர் துபாயில் கொண்டாடி வருகின்றனர். படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், மாஸ்டர் படத்தில் இணை தயாரிப்பாளரான ஜெகதீஷ் ஆகியோர் துபாயில் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனிருத், ரசிகர்களுக்காக மாஸ்டர் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை ரிலீஸ் செய்யும் பணியில் பிஸியாக உள்ளார்.

தளபதி 65 படம்

தளபதி 65 படம்

ஓடிடி பிளாட் ஃபார்மில் படம் கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்ட போதும் பல இடங்களில் தியேட்டர்களில் இன்னமும் கூட்டம் அலை மோதுகிறது. இதனிடையே அனிருத், நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X