லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்திலிருந்து மற்றொரு முக்கிய பிரமுகர் விலகல்
சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படமே அவருக்கு பெரிய பலமாக அமைந்தது. தொடர்ந்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைது படம் மாஸ் ஹிட்டாக அமைந்து, ஹிட் பட டைரக்டர் என்ற பெயரை லோகேஷ் கனகராஜிற்கு பெற்றுக் கொடுத்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த மாஸ்டர் படமும் பிரம்மாண்ட வெற்றி படமாகவே அமைந்தது.

அடுத்தடுத்த பிரம்மாண்ட வெற்றிகளைத் தொடர்ந்து கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஃபகத் ஃபாசிலுடன் மற்றொரு முக்கிய வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பிரதான வில்லன் வேடத்தில் நடிக்கவே விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் கடந்த 3 படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் இந்த படத்திலும் பணியாற்ற உள்ளதாக கூறப்பட்டது. தற்போது, விக்ரம் படத்தில் இருந்து சத்யன் சூரியன் விலகி இருப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.
இதனால் விஜய்யின் சர்கார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான கிரிஷ் கங்காதரன் விக்ரம் படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விக்ரம் படத்தில் இருந்து லாரன்ஸ் விலகியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
துவக்கம் முதலே விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் தான் வில்லனாக நடிக்க போகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென இப்படத்திலிருந்து அவர் விலகுவதாக அறிவிப்பு வந்தது. தற்போது ஒளிப்பதிவாளரும் விலகி உள்ள பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











