மாலையும் கழுத்துமாய் லோகேஷ் அன்ட் அனிருத்.. மாஸ்டர் படத்துக்காக திருவண்ணாமலையில் ஸ்பெஷல் பூஜை!

சென்னை: மாஸ்டர் திரைப்படம் வெற்றிபெற வேண்டி படக்குழுவினர் திருவண்ணாமலை கோவிலில் பூஜை நடத்தினர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் ஷாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஸ்ரீமன், ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இந்தப் படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது. அதனை தொடர்ந்து ஓடிடி தளத்தில் மாஸ்டர் படம் வெளியாக போவதாக தகவல் வெளியானது.

13ஆம் தேதி ரிலீஸ்

13ஆம் தேதி ரிலீஸ்

ஆனால் இதனை படக்குழு மறுத்து வந்தது. மேலும் எப்போது ரிலீஸ் ஆனாலும் மாஸ்டர் படம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என திட்டவட்டமாக அறிவித்தனர். இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி மாஸ்டர் படம் ரிலீஸாக உள்ளது.

ஒவ்வொரு ரகம்

ஒவ்வொரு ரகம்

இதனை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இதுவரை மாஸ்டர் படத்தின் 6 ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக உள்ளது. மாஸ்டர் படத்துக்கான டிக்கெட் முன்பதிவிலும் தீயாய் இறங்கியுள்ளார்கள் ரசிகர்கள்.

ஸ்பெஷல் பூஜை

ஸ்பெஷல் பூஜை

இந்நிலையில் மாஸ்டர் படம் வெற்றி பெற வேண்டி, படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், உட்பட படக்குழுவினர் மாஸ்டர் படம் வெற்றி பெற வேண்டி திருவண்ணாமலை கோவிலில் ஸ்பெஷல் பூஜை நடத்தினர்.

மாலையும் கழுத்துமாய்

மாலையும் கழுத்துமாய்

லோகேஷ் கனகராஜ், அனிருத் உட்பட படக்குழுவினர் மாலையும் கழுத்துமாய் இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X