விசாரணை.. ரெய்டு.. மீண்டும் ஷுட்டிங் ஸ்பாட் சென்ற விஜய்.. உற்சாக வரவேற்பு கொடுத்த மாஸ்டர் டீம்!

Recommended Video

Thalapathy Vijay in Master Shooting Spot | Master | Lokesh Kanagaraj

சென்னை: வருமான வரித்துறை ரெய்டுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற நடிகர் விஜய்க்கு படக்குழுவினர் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

என்எல்சி சுரங்கம்

என்எல்சி சுரங்கம்

மேலும் படத்தில் ஷாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஷுட் செய்யப்பட்ட நிலையில் க்ளைமேக்ஸ் காட்சிகள் நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் காட்சியாக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையே நடக்கும் சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறது.

ஐடி ரெய்டு

ஐடி ரெய்டு

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விஜய் வீட்டில் ரெய்டு

விஜய் வீட்டில் ரெய்டு

பின்னர் விஜயை சென்னை அழைத்து வந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதோடு அவரது வீடுகளிலும் சோதனை நடத்தினர். இரண்டு நாட்களாய் நடைபெற்ற சோதனை நேற்று இரவுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து நடிகர் விஜய் இன்று மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்க நெய்வேலி சென்றார்.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற அவருக்கு படக்குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்ததாக தெரிகிறது. இதேபோல் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே பட்டாசுகளும் வெடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு மீண்டும் விஜய் சென்றதை பார்த்த படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X