ஆமாங்க.. தளபதி விஜய் விஷ் பண்ணாரு.. மாளவிகா மோகனனுக்கு மாஸ்டர் டீம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

சென்னை: நடிகை மாளவிகா மோகனனின் 27வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு மாளவிகா மோகனனுக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றையும் கொடுத்து இருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன மாளவிகா மோகனன் கொரோனா குறித்தும் புலம்பி உள்ளார்.

ஹேப்பி பர்த்டே மாளவிகா

ஹேப்பி பர்த்டே மாளவிகா

பான் இந்திய நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனனின் 27வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. காலை முதலே தளபதி ரசிகர்கள் தங்களின் புதிய தலைவியை வாழ்த்து மழையால் நனைய விட்டனர். பிறந்தநாள் ஹாஷ்டேக்குகளும் டிரெண்டாகின. பல சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

என்ன ரோல்

என்ன ரோல்

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் புரொஃபஸராக நடிக்கிறார். நடிகை மாளவிகா மோகனன் லேடி லெக்சரராக நடிக்கிறார் என்கிற தகவல் படக்குழு வெளியிட்ட "அந்த கண்ண பாத்தாக்க" லிரிக் வீடியோ மூலம் ரிவீல் செய்திருந்தனர். படத்தில் மேலும், சில சர்ப்ரைஸ்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பார் என்றே தெரிகிறது.

கேக் கட்டிங்

கேக் கட்டிங்

லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்து வரும் நடிகை மாளவிகா மோகனன், சிம்பிளாக கேக் வெட்டி தனது குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது, சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நள்ளிரவிலேயே மாஸ்டர் ஹீரோயினுக்கு மாஸ்டர் படக்குழுவில் இருந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்துவிட்டதாம்.

ஆமாம்.. தளபதி விஷ் பண்ணாரு

ஆமாம்.. தளபதி விஷ் பண்ணாரு

மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன், தனது பிறந்தநாளை முன்னிட்டு, மாலை 6 மணிக்கு, ரசிகர்களுடன் #AskMalavika என்ற செஷனை நடத்தினார். அப்போது ரசிகர்கள், உங்கள் பிறந்தநாளுக்கு தளபதி விஜய் வாழ்த்தினாரா? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு? ஆமாம்.. அவர் எப்போதுமே ரொம்ப ஸ்வீட்டான மனிதர் என பதில் அளித்துள்ளார். மேலும், மாஸ்டர் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு எதையுமே ரிவீல் பண்ணாம சிம்பிளா க்யூட்டா பதிலளித்து வருகிறார். முன்னதாக தளபதி விஜய்யுடன் வீடியோ காலில் பேசிய புகைப்படத்தை மாளவிகா பகிர்ந்து வைரலாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது

கொரோனா மீது கோபம்

கொரோனா மீது கோபம்

ஏப்ரல் மாதமே மாஸ்டர் படம் ரிலீசாகி விடும் என்கிற குஷியில் இருந்த மாளவிகா மோகனனுக்கு வில்லனாக கொரோனா வைரஸ் வந்துவிட்டது. படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு காமன் டிபியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்ட மாஸ்டர் நாயகி, சென்னையில் மாஸ்டர் படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாட தீர்மானித்து இருந்தேன் Stupid Corona என கொரோனாவை திட்டித் தீர்த்துள்ளார்.

Recommended Video

Master Team special Wishes to Thalapathy Vijay | Malavika Mohanan, Anirudh
சர்ப்ரைஸ் கிஃப்ட்

சர்ப்ரைஸ் கிஃப்ட்

தளபதி விஜய்யின் பிறந்தநாளைக்கு பண்ணது போலவே மாளவிகா மோகனன் பிறந்த நாளுக்கும் மாஸ்டர் பட பாடலான "அந்த கண்ண பாத்தாக்கா" பாடலின் மற்றுமொரு பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளனர். தளபதி ரசிகர்களுக்கு இது பெரிய அளவில் சந்தோஷத்தை கொடுக்க வில்லை என்றாலும், மாளவிகா மோகனன் ரொம்ப ஹேப்பியா தனது இன்ஸ்டா பக்கத்தில் அதனை ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X