அடுத்த லொக்கேஷன் சென்னையாம்.. பஸ்ஸா.. வேனா.. வர்லாம் வர்லாம் வா.. பரபரக்கும் விஜய் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: நெய்வேலி மாஸ்டர் படப்பிடிப்பு இப்படி பிரமாண்டமாக மாறும் என்று விஜய்யே எதிர்பார்த்திருக்க மாட்டார். அப்படி ஒரு அதகளமாக படப்பிடிப்பை முடித்தது டீம்.. காரணம் ஐடி ரெய்டு.. அதனால் குவிந்த ரசிகர் கூட்டம்.
மாஸ்டர் படப்பிடிப்பின் கடைசி இரு நாட்களில் விஜய் நேரில் வந்து ரசிகர்களைப் பார்த்து உற்சாகப்படுத்தினார். அத்தோடு விட்டாரா.. வேனில் ஏறி ஸ்டைலாக ஒரு செல்பி, அடுத்த நாள் பஸ்சில் ஏறி ஒரு சூப்பர் கும்பிடு என ரசிகர்களை குஷிப்படுத்தி விட்டார்.
முன்பெல்லாம் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளில்தான் இப்படி ஒரு பெரும் கூட்டம் கூடும். அது பழைய காலம். இப்போது அந்த இடத்தை விஜய் பிடித்து விட்டார். இந்தக் கூட்டம் யாரும் எதிர்பாராதது. அனைவரையுமே ஆச்சரியப்படுத்தி விட்டது.

மாஸ்டர் குழு
நெய்வேலி ஷூட்டிங்கை முடித்த மாஸ்டர் குழு அடுத்து சென்னையில் இறுதிக் கட்ட படப்பிடிப்பை வைத்துள்ளனராம். எந்த இடத்தில் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் இடம் மட்டும் தெரிந்தால் நிச்சயம் ரசிகர் கூட்டம் அலை அலையாய் குவிந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் சென்னை ரசிகர்கள் படு ஆவலாக இடத்தை அறிய காத்துள்ளனராம்.

அடுத்து சென்னை
வழக்கமாக பின்னி மில்லில் விஜய் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் ஷூட்டிங் நடந்துள்ளது. போக்கிரி, பைரவா என பல படங்கள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளன. எனவே மாஸ்டர் படத்தின் முக்கியக் காட்சிகளை இங்கு படம் பிடிக்க வாய்ப்புள்ளது. அல்லது ஏதாவது செட்டுக்குள் வைத்து சேப்ஃபிடியாக படம் பிடிப்பார்களா என்று தெரியவில்லை.

விடாமல் வருவோம்
எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் வராமல் இருக்க மாட்டோம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனராம். விஜய் யார்னு காட்டியே தீருவோம் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். காரணம், அவர் பாட்டுக்கு சிவனேன்னு நடிச்சிட்டிருக்கார். தேவையில்லாமல் அவரை தொடர்ந்து சீண்டிக் கொண்டே உள்ளனர். எனவே விஜய்க்கு ஆதரவாக நாங்கள் அவரை பின் தொடர்வோம் என்று கூறுகின்றனராம்.

சரி கதை என்ன
அதை விடுங்க.. மாஸ்டர் படத்தின் கதை இதுதான் என்று டீக்கடை தோறும் ஒரு கதையை பத்தி பேசிக் கொண்டுள்ளனர். அந்தக் கதையில் பெரிய அளவில் புதுமை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் விஜய், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி போன்ற ஜாம்பவான்கள் இருப்பதால் கதையை வித்தியாசப்படுத்தி கொடுக்க முயற்சித்திருப்பார்கள் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications











