கெஸ் பண்ணது வீண் போகல.. மாஸ்டர் 3வது லுக் நாளை ரிலீஸ்.. இந்த முறை விஜய்சேதுபதி தரிசனம்!
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் 3வது லுக் நாளை ரிலீசாகிறது.
விஜய்சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு எதிர்பார்த்த அவரது மாஸ்டர் லுக் நாளை வெளியாகிறது என்ற அறிவிப்பை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
ரத்னகுமார் போட்ட சிக்னல் ட்வீட் மாஸ்டர் படத்தின் அப்டேட்டுக்கான ட்வீட் தான் என கெஸ் பண்ணது வீண் போகவில்லை.
லோடிங்
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நியூ இயரை முன்னிட்டு வெளியானது. பொங்கலுக்கு தளபதி விஜய்யின் மாஸான செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி டிரெண்டானது. இந்நிலையில், நாளை 3வது லுக் லோடிங் என்ற அறிவிப்பு வெளியாகி தளபதி ரசிகர்களை மட்டுமின்றி விஜய்சேதுபதி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இதற்குத் தானே ஆசைப்பட்டாய்
மாஸ்டர் படத்தில் முதல் முறையாக தளபதி விஜய்யுடன் நடித்து வரும் நடிகர் சாந்தனு, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் லுக் நாளை வெளியாகப் போவதை சிம்பாலிக்காக அறிவித்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு மாஸ்டர் 3வது லுக் வெளியாகப் போவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டிரெண்டிங்
மாஸ்டர் படத்தின் 3வது லுக் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகப் போகும் அறிவிப்பு வெளியான சில நொடிகளிலே #MasterThirdLook, #MakkalSelvan என்ற ஹாஷ்டேக்குகளை உருவாக்கி ரசிகர்கள் கொண்டாட்ட மோடுக்கு சென்றுள்ளனர். விஜய்சேதுபதியின் பிறந்த நாளன்று அவரது மாஸ்டர் பட லுக்கை எதிர்பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.

ஸ்பெஷல் சர்ப்ரைஸ்
தளபதி விஜய்யின் படம் என்பதால், நாளை வெறும் விஜய்சேதுபதி லுக் மட்டும் வரப் போகிறதா? அல்லது விக்ரம் வேதா ஸ்டைலில் தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் காட்சி ஃபர்ஸ்ட் லுக்காக வரப் போகிறதா என தளபதி ரசிகர்கள் வேற லெவல் எதிர்பார்ப்பில் ட்வீட்டுகளை போட்டு பட்டையை கிளப்பி வருகின்றனர்.
மெட்டா மாஸ்
மாஸ்டர் படத்தின் அப்டேட் வரப் போவதை தனது மறைமுக ட்வீட்டால் போட்டு தளபதி ரசிகர்களை ஆன்லைனில் அரேஞ்ச் பண்ணும் வேலையை பக்காவாக பார்த்து வரும் அப்டேட் கிங் ரத்னகுமார், இந்த அறிவிப்பை பகிர்ந்து மெட்டா மாஸ் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த மெட்டாவிலும் ஏதாவது மேட்டர் இருக்கா பாஸ்..


Click it and Unblock the Notifications