மாஸ் அப்டேட்.. ரிலீஸ் தள்ளிப் போனதால் கிடைத்த வாய்ப்பு.. இத்தனை மொழிகளில் ரெடியாகும் மாஸ்டர்!

சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Video: Malavika Mohanan Bike racing | Master

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், 5 மொழிகளில் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழு இறங்கி இருக்கிறது.

முதல்முறை

முதல்முறை

எத்தனையோ பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், நடிகர் விஜய்யின் படம் இதுவரை பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என இந்தியா முழுவதும் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக ஐனாக்ஸ் திரையரங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மிஸ்ஸான பிகில்

மிஸ்ஸான பிகில்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து கடந்த ஆண்டு பிரம்மாண்ட சாதனையை படைத்திருந்தது. அந்த படத்தையே பான் இந்தியா படமாக ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி இயக்குநர் அட்லியிடம் வைக்கப்பட்டது.

டைம் கிடைக்கலை

டைம் கிடைக்கலை

அதற்கு பதிலளித்த இயக்குநர் அட்லி, தீபாவளி ரிலீஸ் என்பதால், மற்ற மொழிகளில் டப்பிங் பண்ண நேரம் கிடைக்கவில்லை. அடுத்த முறை தளபதி விஜய்யை வைத்து படம் பண்ணினால், அது பான் இந்தியா ரிலீஸ் படமாகத் தான் இருக்கும் என அட்லி, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கெட்டதுலயும் ஒரு நல்லது நடக்கும் என்பது போல, கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டிய தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்ய மற்ற மொழிகளில் டப்பிங் செய்வதற்கான நேரம் கிடைத்திருக்கிறது.

விஜய் பிறந்தநாளில்

விஜய் பிறந்தநாளில்

கிடைத்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கும் மாஸ்டர் படக்குழு, இந்த முறை தளபதி விஜய்யின் படத்தை ஒரே நேரத்தில் பல மொழிகளில் ரிலீஸ் செய்து மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை குவிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், தளபதி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால், பான் இந்தியா படமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பை மாஸ்டர் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பிறகு மே 3ம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு முழுமையாக தளர்க்கப்பட்ட பிறகு, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பு அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X