மாஸ்டர் ஓடிடியில் ரிலீசா?.. ரசிகர்கள் ஷாக்!

சென்னை: விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், அர்ஜுன் தாஸ் நடிப்பில் பொங்கலன்று வெளியானது மாஸ்டர் திரைப்படம்.

Recommended Video

தியேட்டர்களில் மட்டுமல்ல.. ஓடிடியிலும் மாஸ்டர்… அமேசானில் நாளை நள்ளிரவு ரிலீஸ்!

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். XB FilmCreators நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனமான Amazon Prime வாங்கியுள்ளது.

ரிலிஸில் தாமதம்

ரிலிஸில் தாமதம்

கடந்த வருடம் கோடையில் வெளிவரவேண்டிய மாஸ்டர் திரைப்படம் கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் பொங்கலுக்கு தான் வெளிவந்தது. இதற்கிடையில் படத்தை நேரடியாக OTTயில் வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவர படக்குழு அதற்கு முற்றுப்புள்ளி வைத்து காத்திருந்து திரையரங்கில் வெளியிட்டது.

மாஸ்டர் பொங்கல்

மாஸ்டர் பொங்கல்

இதையடுத்து இந்த ஆண்டு பொங்கலன்று மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு வெளியாகி இன்றளவும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி கொண்டிருக்கிறது. தற்போது வரையில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து திரையரங்க உரிமையாளர்களுக்கு வசூல் மழையாக பொழிந்து வருகிறது.

தவிக்கும் ரசிகர்கள்

தவிக்கும் ரசிகர்கள்

உலகமெங்கும் பல நாடுகளில் மாஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பி வந்தாலும் கொரோனா 2ம் அலை காரணமாக சில நாடுகளில் படம் வெளியாகவில்லை. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் ரசிகர்கள் பலரும் தவித்து வருகின்றனர். கூடிய விரைவில் OTT ரிலீஸை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

ரசிகர்கள் மறுப்பு

ரசிகர்கள் மறுப்பு

அதைத்தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் வரும் 29ம் தேதி OTT யில் வெளிவர போவதாக சமூக வலைதளங்களில் செய்தி தீயாக பரவி வருகிறது. இது வெளிநாடு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், இதனால் வசூல் பாதிக்கும் என உள்ளூர் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ் அறிவிப்பை எதிர்நோக்கி காத்துள்ளனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X