ஏமாற்றியது இந்தாண்டு.. 2021-ல் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படங்கள்.. மாஸ்டர், வலிமை.. அப்புறம்?

By

சென்னை: இந்த வருடம் சினிமா துறையில் மாஸ் படங்கள் ரிலீஸ் ஆகாததால், ரசிகரகள் அடுத்த வருடத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அழையா விருந்தாளியாக வந்த கொரோனா வைரஸ், இந்த வருடம் உலகம் முழுவதும் ரணகளப்படுத்தி விட்டது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டதில் சினிமா துறையும் ஒன்று,

விதிவிலக்கா என்ன?

விதிவிலக்கா என்ன?

தியேட்டர்கள் மூடப்பட்டதால், பல மெகா பட்ஜெட் படங்களின் ரிலீஸ் அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போயிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவே நிலை. தமிழ் சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன? சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானாலும் சில பெரிய படங்கள் அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போயிருக்கிறது.

மாஸ்டர் பொங்கல்

மாஸ்டர் பொங்கல்

விஜய்யின் மாஸ்டர் படம், இந்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. இதில், மாளவிகா மோகனன் ஹீரோயின். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். ஆண்ட்ரியா, சாந்தனு உட்பட பலர் நடித்திருக்கிறார். கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கிறார் விஜய். அனிருத் இசையில் பாடல்கள் ஹிட்டான நிலையில், இந்தப் படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அஜித்தின் வலிமை

அஜித்தின் வலிமை

அடுத்து மெகா எதிர்பார்ப்பில் இருப்பது அஜித்தின் 'வலிமை'. ஹூமா குரேஸி ஹீரோயின். போனி கபூர் தயாரிக்கிறார். போலீஸ் அதிகாரியாம் அஜித். படத்தின் ஆக்‌ஷன் பிளாக்குகள் அதிர வைக்கும் என்கிறது தகவல். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கிய ஹெச். வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார்.

கமலின் இந்தியன் 2

கமலின் இந்தியன் 2

ஷங்கரின் இந்தியன் 2 படத்துக்கு அத்தனை எதிர்பார்ப்பு. கமல்ஹாசன், காஜல், ரகுல் பிரீத் சிங் உட்பட பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில். விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இது வெளியாகலாம் என்கிறார்கள். முதல் பாகத்தில் லஞ்சத்தை எதிர்த்த இந்தியன் தாத்தா இதில் என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம்

எப்போதோ முடிந்துவிட்ட தனுஷின் ஜகமே தந்திரம், ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. இப்போது அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயின்.

விஜய் சேதிபதி லாபம்

விஜய் சேதிபதி லாபம்

இதைப் போல, தனுஷின் கர்ணன், சிவகார்த்திகேயனின் அயலான், டாக்டர், விஜய் சேதிபதியின் லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார் உட்பட பல படங்கள் இந்த வருட ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இதற்கிடையே சில பான் இந்தியா படங்களும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

கே.ஜி.எஃப்: சாப்டர் 2

கே.ஜி.எஃப்: சாப்டர் 2

அதில் ஒன்று கே.ஜி.எஃப் 2. எதிர்பார்க்காத நேரத்தில் அதிரடியாக களமிறங்கி மிரட்டிய படம், கே.ஜி.எஃப். இப்போது இதன் இரண்டாம் பாகம் இது. யஷ், சஞ்சய் தத், ஶ்ரீனிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் உட்பட பல நடித்திருக்கின்றனர். பீரியட் படம். பிரஷாந்த் நீலின் கதை சொல்லும் பாணியும் திரையும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது, இந்த படத்தை.

ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர்

ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர்

இதே போல பான் இந்தியா படமாக உருவாகி மற்றொரு படம், ஆர்ஆர்ஆர். ராஜமவுலியின் இயக்கம் என்றாலே அதற்கு தனி மவுசு. அது இந்தப் படத்தின் டீஸரிலேயே அது தெரிந்தது. படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம். இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது இது.

ராதே ஷ்யாம்

ராதே ஷ்யாம்

பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம், அல்லு அர்ஜுனின் புஷ்பா, மலையாளத்தில் உருவாகியுள்ள அரபுக் கடலின் சிங்கம் உட்பட பான் இந்தியா படங்களும் இந்த ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இதுவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X