மாஸ்டர் ட்ரெயிலரில் ஒரு டயலாக் செம ஹிட்டாகும்.. பிரபல நடிகர் சொன்ன ரகசியம்.. தெறிக்கும் டிவிட்டர்!
சென்னை: மாஸ்டர் படம் குறித்து அர்ஜூன் தாஸ் கூறிய ஒரு தகவலால் டிவிட்டர் தளமே தெறித்து வருகிறது.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம்.
கடந்த மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம், லாக்டவுன் காரணமாக போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெறாத காரணத்தால் தள்ளி போனது.

ட்ரெயிலர் அன்ட் டீசர்
தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளதை தொடர்ந்து படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. படத்தின் ட்ரெயிலர் மற்றும் டீசருக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

அர்ஜூன் தாஸ்
ஆனால் ட்ரெயிலர் ரிலீஸ் குறித்து இதுவரை ஒரு தகவல் கூட அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜூன் தாஸ் படம் குறித்த ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார்.

நிச்சயம் வரவேற்பு இருக்கும்
சமூக வளைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அர்ஜூன் தாஸ்,மாஸ்டர் படத்தின் ட்ரெயிலரை இதுவரை தான் 6 முறை பார்த்து விட்டதாக கூறினார். மேலும் ட்ரெயிலர் தேதி முடிவு செய்யப்பட்டு வெளியிடப்படும் என்ற அவர் நிச்சயம் ட்ரெயிலருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றார்.

ஹேஷ்டேக்
தொடர்ந்து ட்ரெயிலர் குறித்து பேசிய அர்ஜூன் தாஸ், அதில் வரும் ஒரு டயலாக் பெரிதும் பேசப்படும் என்றார். அர்ஜூன் தாஸ் வெளியிட்ட இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் #MasterTrailer என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

ட்ரென்டிங்
அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் கசிந்துவிட்டதாகவும், லோகேஷ் கனகராஜ் தரமான சம்பவம் செய்துவிட்டார் என்றும் நெட்டிசன்கள் டிவிட்டி வருகின்றனர். இதனால் மாஸ்டர் ஹேஷ்டேக் டிவிட்டரிடல் ட்ரென்ட்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











