என்னை எதுக்கு கோத்து விடுற.. மாஸ்டர் நடிகரை வெளுத்து வாங்கிய பிரபல இயக்குநர்!
சென்னை: மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட் விவகாரத்தில், நடிகர் ஷாந்தனுவுக்கும் ஆடை பட இயக்குநர் ரத்னகுமாருக்கும் இடையே செல்ல சண்டை நடந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், விஜே ரம்யா, செளந்தர்யா, சேத்தன், பிரேம் குமார் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி வெளியாகி வைரலான நிலையில், அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

யார் கொடுக்குறா
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யின் ரசிகரும் நடிகருமான ஷாந்தனு பாக்கியராஜ் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். மாஸ்டர் படம் தொடங்கியதில் இருந்தே, ஷாந்தனு மற்றும் ஆடை பட இயக்குநரும் மாஸ்டர் பட ரைட்டருமான ரத்னகுமார் ஆகிய இருவரும் தான் ரசிகர்களுக்கு அப்டேட் சிக்னல் கொடுத்து வருகின்றனர்.

இதுக்குத்தான் வெயிட்டிங்
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில், ஏ.அர். ரஹ்மான் இசையில் வெளியான பிகில் படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்னதாகவே, சிங்கப்பெண்ணே, வெறித்தனம் உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தன. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பாக செகண்ட் சிங்கிள் பாட்டுக்குத்தான் ரசிகர்கள் வெயிட்டிங்.
எங்களுக்கு இப்பவே வேணும்
பிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்துள்ளதால், மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்ற அப்டேட்டை தளபதி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் ஷாந்தனுவிடம் அப்டேட் கேட்டு அடம் பிடித்து வருகின்றனர்.
அடிச்சாலும் சொல்ல மாட்டோம்
இந்நிலையில், மாஸ்டர் அப்டேட் கொடுக்காத ஷாந்தனுவை ரசிகர்கள் அடிப்பது போன்ற வீடியோ மீம் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசித்த ஷாந்தனு, மாஸ்டர் அப்டேட் வர வேண்டிய நேரத்துல வரும், என்னையும், மிஸ்டர் ரத்னாவையும் எவ்ளோ அடிச்சாலும் சொல்ல மாட்டோம் என கமெண்ட் போட்டுள்ளார்.
ஏன் கோத்துவிடுற
இதைப் பார்த்த ஆடை பட இயக்குநரும், மாஸ்டர் பட ரைட்டருமான நம்ம அப்டேட் கிங் ரத்னகுமார், என்னை எதுக்கு மேன் கோத்து விடுற என கேப்ஷன் போட்டு, தில்லு வாலே புச்சுடேனச்சா.. என அபாஸ் எபிக் ரியாக்ஷன் புகைப்படத்தை பதிவிட்டு, ட்விட்டரில் இருவரும் மாற்றி மாற்றி ரகளை செய்து வருகின்றனர்.
இந்த அவமானம் தேவையா
வரும் போது வரும்னு சொல்றவன் மனுஷன் இல்லடா.. என நடிகர் ஷாந்தனு மற்றும் ரத்னகுமாரை டேக் போட்டு, ஃபேன்ஸ் கேட்ட உடனே அப்டேட் சொல்றான் பாரு அவன் தான் டா பெரிய மனுஷன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு டேக் போட்டு, நாட்டாமை மீமை வச்சு செம செய்கை செய்துள்ளார் இந்த ரசிகர்.
அப்போ அப்டேட் இருக்கு
ரத்னகுமார் அண்ணன் ட்வீட் போட்டாலே போதும், அன்னைக்கு அப்டேட் தான்.. கன்ஃபார்மே பண்ணிடலாம். ரொம்ப நன்றினா, நிச்சயம் மாஸ்டர் பட அப்டேட் வரப் போகுது என ரத்னகுமாரும், ஷாந்தனுவும் ட்விட்டர் வந்தாலே அப்டேட் பின்னால வரும் என்பதை தளபதி ரசிகர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











