மாஸ்டர் மாஸ் அப்டேட் வெயிட்டா வரப் போகுது போல.. சிக்னல் கொடுத்துட்டாரே அப்டேட் கிங் ரத்னகுமார்!

சென்னை: ஆடை படத்தின் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் ரைட்டருமான ரத்னகுமார் மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் வரப்போகுது என்பதற்கான சிக்னலை கொடுத்துள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேயாத மான், ஆடை படங்களை தொடர்ந்து அடுத்து என்ன படம் பண்ண போறீங்க ப்ரோ என எல்லோரும் தன்னிடம் கேட்பது போல் கேட்டுவிட்டு, கடைசியாக மாஸ்டர் பட அப்டேட் கொஞ்சம் சொல்லுங்களேன் என பிட்டு போடுகின்றனர் என ரத்னகுமார் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

சம்மந்தமே இல்லாமல் இப்படி ட்வீட் போட மாட்டீங்களே.. அப்போ கண்டிப்பா அடுத்த அப்டேட்டுக்கான சிக்னல் தான் என தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக கமெண்ட்டுகளை போட்டு காத்திருக்கின்றனர்.

மரண வெயிட்டிங்

ப்ரோ உங்க அடுத்த படத்துக்கு மரண வெயிட்டிங் என்று சிலர் மெசேஜ் அனுப்பிவிட்டு கடைசியாக, அப்படியே அந்த மாஸ்டர் அப்டேட் என கேட்கிறார்கள் என ரத்னகுமார் புலம்பல் ட்வீட் போட்டுள்ளார். அவர்களுக்கு தனது பதிலாக சிம்புவின் ரியாக்‌ஷன் வீடியோவை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

மாஸ்டர் அப்டேட்

ஆனால், அவர் போட்ட இந்த ட்வீட்டே மறைமுகமான மாஸ்டர் பட அப்டேட்டுக்கான ட்வீட் தான் என தளபதி ரசிகர்கள் ரவுண்டு கட்டி அவரை கலாய்த்தும், அடுத்த அப்டேட் சொல்லுங்க ப்ரோ என்று நச்சரித்தும், அப்டேட்டுக்கான சிக்னல் கொடுத்ததுக்கு தேங்ஸ் தலைவா என வாழ்த்தியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிம்பாலிக்கா

ஒவ்வொரு முறையும் மறைமுகமாக ஃபன் போஸ்ட் போட்டு, தளபதி விஜய்யின் மாஸ்டர் அப்டேட் வரப்போகுதுன்னு சிம்பாலிக்கா சொல்றதுல தலைவன் ரத்னகுமார் சூப்பர் என்று இந்த நெட்டிசனும் அடுத்த மாஸ்டர் அப்டேட் மரண மாஸாக வரப்போகிறது என்ற நம்பிக்கையில் ரத்னகுமாரை பாராட்டி கமெண்ட் போட்டுள்ளார்.

ஸ்பெஷல்

தலைவன் ரத்னகுமார் மாஸ்டர் பத்தி ஏதாவது சொன்னாலே சம்திங் ஸ்பெஷல்னு தான் அர்த்தம் நண்பா என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார். மேலும், பல தளபதி ரசிகர்களும், ரத்னகுமாரின் ட்விட்டர் போஸ்ட்டுக்கு கீழே மாஸ்டர் அப்டேட் வரப்போகுது அதானே ப்ரோ என கமெண்ட் செய்து மாஸ் காட்டி வருகின்றனர்.

சும்மாதானே இருந்தோம்

நாங்க பாட்டுக்கு சும்மா தானே இருந்தோம்.. ஏன் மாஸ்டர ஞாபக படுத்தினீங்க.. இப்போ எங்களுக்கு அப்டேட் வேண்டும் என சில தளபதி ரசிகர்களும் அப்டேட்டுக்காக கமெண்ட்டுகளை போட்டு ரத்னகுமார் ஏன் டா தெரியாத்தனமா இந்த பதிவை இப்போ போட்டுட்டோமோ என ஃபீல் பண்ற அளவுக்கு கதற விட்டு வருகின்றனர்.

தலைவா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, கெளரி கிஷன், ரம்யா, செளந்தர்யா, பிரேம் குமார், சேத்தன், ஸ்ரீநாத் என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் மாஸ்டர். சம்மர் விடுமுறை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள மாஸ்டர் படம் அடுத்த மாதம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியவுள்ள நிலையில், அப்டேட் விடு தலைவா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

குடியரசு தினம்

புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை நாட்களை குறிவைத்து மாஸ்டர் படத்தின் அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டது. நாளை குடியரசு தினம் என்பதால், அதனை முன்னிட்டு படு மாஸான அப்டேட் வெளியாகப் போகிறது என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கான சிக்னலை தான் தற்போது ரத்னகுமார் கொடுத்துள்ளார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

அப்படியே அந்த

மாஸ்டர் படத்தின் கதையாசிரியர் ரத்னகுமாரிடம் அப்படி தொல்லை செய்தது இந்த ரசிகராகத் தான் இருக்க முடியும். அதே போல ஒரு வடிவேலு மீமை போட்டு, ப்ரோ உங்க அடுத்த படத்துக்காக மரண வெயிட்டிங்.. அப்புறம் அப்படியே அந்த மாஸ்டர் அப்டேட்டு.. என செம்ம காமெடியாக கமெண்ட் செய்துள்ளார்.

சிம்பு படம்

இது மாஸ்டர் பட அப்டேட்டுக்கான சிக்னல் இல்லீங்கோ.. ரத்னகுமார் சிம்புவை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதற்கான மாஸ் அப்டேட்டுங்கோ.. போட்றா வெடிய என இந்த ரசிகர் ரத்னகுமாரையே வைத்து செம்மையாக கலாய்த்துள்ளார். சொல்லவும் முடியாது மாநாடு படத்துக்கு அப்புறம் ரத்னகுமார் சிம்புவை வைத்து படம் பண்ணாலும் பண்ணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X