இந்த வாட்டி தளபதியை நேரடியா பார்க்க முடியாது.. அப்செட்டான ரசிகர்கள்.. இதுதான் காரணமாம்!
சென்னை: மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வரும் என ஹாஷ்டேக் உருவாக்கி வைத்துக் கொண்டு காத்திருந்த ரசிகர்களுக்கு, மாஸ்டர் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள அப்டேட் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Recommended Video
மாநகரம், கைதி படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது, அதுகுறித்த மற்றொரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
சன் டிவியில்
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற உள்ளதால், ரசிகர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. தளபதி ரசிகர்கள் அனைவரும், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் நேரலையில் காணலாம் என்பதைத் தான் தற்போது, அப்டேட்டாக படக்குழு வெளியிட்டுள்ளது.

என்ன காரணம்
பிகில் இசை வெளியீட்டு விழாவின் போது ஏற்பட்ட பிரச்சனைகளின் எதிரொலியாக, மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், கோவையில் உள்ள கல்லூரியில் விழாவை நடத்தவும் அனுமதி கொடுக்கவில்லையாம். அதனால், நட்சத்திர ஹோட்டலில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை படக்குழுடன் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ரசிகர்கள் அப்செட்
மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் நிச்சயம் இன்று மாலை வெளியாகும் என காலையில் இருந்து எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள், #MasterSecondSingle என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி காத்திருந்தனர். இந்நிலையில், நேற்றே சன் டிவியில் நேரலை என்ற அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது, அந்த அப்டேட்டையே மீண்டும் கொடுத்துள்ளதால், விஜய் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
நேத்தே தெரியுமே
இது நேத்தே தெரியுமே டா.. இதுவாடா அப்டேட்டு என விஜய் ரசிகர்கள், மீம்களை போட்டு, தங்களின் அதிருப்தியை மாஸ்டர் படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே எதிர்பார்த்த படி மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் இசை வெளியீட்டின் போது தான் வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது.
எடுடா அந்த அருவாள
ஜகதீஷ் ப்ளிஸ் இது தான் உங்க புது அப்டேட்டா.. இதை நேத்தே சொல்லியாச்சு, எடுடா அந்த அருவாளா என தொடர்ந்து, தளபதி ரசிகர்கள் மீம்களாக போட்டு, ட்விட்டரை அதகளப்படுத்தி வருகின்றனர். மாஸ்டர் 15ம் தேதி சன் டிவியில் விஜய் பேசுவதை ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
விஜய் பேசுவாரா
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், தளபதி விஜய், பல விஷயங்களை பேசுவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்த அப்டேட்டாவது விட்டீங்களே.. இதுவே போதும், விஜய் பேச்சுக்காக வெயிட்டிங் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இசை வெளியீட்டு விழா நடத்தவே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிகில் அளவுக்கு மாஸ் ஸ்பீச் இருக்குமா? என்பதும் டவுட்டு தான்..


Click it and Unblock the Notifications