பொறுத்திருந்தது போதும்.. பொங்கி எழுங்க புள்ளைங்களா.. இனிமே வாத்தி ரெய்டு மரண ஆட்டமாக இருக்கும்!

சென்னை: மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் ரொம்பவே வெயிட் பண்ணி விட்டனர்.

இந்நிலையில், பொறுத்தது போதும் என புள்ளிங்கோவை எல்லாம் குஷிப்படுத்தி உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இன்று மாலை 6 மணிக்கு தாரை தப்பட்டை எல்லாம் கிழிந்து தொங்கும் அளவுக்கு மாஸ்டர் அப்டேட் வரப் போகிறது.

கொரோனாவால் நேர்ந்த கொடுமை

கொரோனாவால் நேர்ந்த கொடுமை

போன தீபாவளிக்கு பிகில் அடித்த விஜய், அடுத்த தீபாவளி வரை தனது புள்ளிங்கோவை காக்க வைக்கக் கூடாது என சம்மருக்கே சூப்பர் ‘மாஸ்டர்' பீஸை இறக்க ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கினார். ஆனால், கொரோனா கம்மிங்கால், வாத்தி கம்மிங் டைம் ரொம்பவே லேட் ஆகிடுச்சு.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிடும்

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிடும்

சம்மருக்கு ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்ன மாஸ்டர் படம் கண்டிப்பா தீபாவளிக்கு ரிலீசாகிடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இதுவரை டீசர் கூட ரிலீசாகாமல் தாமதம் ஆகி வருவது ரொம்பவே வருத்தத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் பிறந்தநாள் அன்றும் வெறும் போஸ்டர் மட்டுமே வெளியானதால் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகினர்.

ஒடிடி தளங்களுக்கு நோ

ஒடிடி தளங்களுக்கு நோ

சூர்யாவின் சூரரைப் போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படம் எல்லாம் ஒடிடி தளங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அமேசான் பிரைமில் இருந்து நெட்பிளிக்ஸ் வரை எத்தனையோ ஒடிடி தளங்கள் முட்டி மோதி பார்த்தும், தனது ரசிகர்களுக்காக மாஸ்டர் ரிலீஸ் ஆனால், தியேட்டரில் தான் என விஜய் தீர்க்கமான முடிவோடு இருந்து ரசிகர்களின் தலைவனாக மாறி உள்ளார்.

Recommended Video

Master Teaser Record Breaking • Trending in 9 Countries | Thalapathy Vijay
தீபாவளி ட்ரீட்

தீபாவளி ட்ரீட்

தியேட்டர்கள் எதிர்பார்த்ததை போல திறக்கப்பட்டுள்ள நிலையில் சீக்கிரமே மாஸ்டர் படத்தை பெரிய திரைகளில் பார்த்து ரசிகர்கள் கொண்டாட உள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் டீசர் ரிலீஸ் பண்ண வேண்டும் என்கிற கோரிக்கையும் சீக்கிரமே நிறைவேற போகிறது.

அப்டேட் லோடிங்

இந்நிலையில், தளபதி ரசிகர்கள் பொறுமையை இதற்கு மேலும், சோதிக்க விரும்பாத படக்குழு, இன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் அப்டேட் லோடிங் என்கிற அசத்தலான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அதிகாரப்பூர்வ ட்விட்டை பார்த்ததும் #MasterUpdate இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X