நூறு மில்லியனை தாண்டிய வாத்தி கம்மிங்.. அந்தர் கிளப்பும் மாஸ்டர் விஜய்யின் அசத்தல் ரிலீஸ் புரமோ!

சென்னை: வரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு தளபதி விஜய் நடனமாடும் வாத்தி கம்மிங் பாடல் வீடியோ புரமோ வெளியாகி உள்ளது.

வாத்தி கம்மிங் பாடல் இதுவரை 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் தரிசனத்தை கண்ட ரசிகர்கள் இப்போதே படத்தை பார்க்கும் ஆர்வத்தில் அந்தர் கிளப்பி வருகின்றனர்.

வாத்தி கம்மிங்

வாத்தி கம்மிங்

தளபதி விஜய்யின் பாடல்கள் அசால்ட்டாக நூறு மில்லியனை தொடுவதெல்லாம் வாடிக்கையாகி விட்டது. மாஸ்டர் திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை தொடர்ந்து வாத்தி கம்மிங் பாடலும் நூறு மில்லியன் பார்வைகளை யூடியூப் தளத்தில் கடந்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி க்ரியேட்டர்ஸ் தற்போது அதனை கொண்டாடி வருகின்றனர்.

அந்தர் டான்ஸ்

வாத்தி கம்மிங் பாடலின் லிரிக் வீடியோவில் அனிருத் நடனமாடிய அந்த வீடியோவே 100 மில்லியன் வியூக்களை தாண்டி அதிரடி காட்டி வரும் நிலையில், தளபதி விஜய்யின் அந்தர் டான்ஸை தற்போது பார்த்த விஜய் ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உறைந்து போயுள்ளனர்.

100% இருக்கை சர்ச்சை

100% இருக்கை சர்ச்சை

நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், கொரோனா காலத்தில் தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி அளிப்பது தற்கொலைக்கு சமம் என மருத்துவர் ஒருவர் வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை கிளப்பி உள்ளது. வெளிநாடுகளில் கூட இன்னமும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 தளபதி பொங்கல்

தளபதி பொங்கல்

இந்த பொங்கல் பண்டிகை திரையரங்குகளில் நிச்சயம் தளபதி பொங்கலாக கொண்டாடப்படும் என்பதில் எந்தவொரு ஆச்சர்யமுமில்லை. மாஸ்டர் கொண்டாட்டத்தை விட மக்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும்பட்சத்தில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X