ஜிலு ஜிலுன்னு மாளவிகா.. கல கலன்னு கவுரி.. ஹேண்ட்ஸம் விஜய்.. இது மாஸ்டர் ஆடியோ லான்ச் அட்டென்டன்ஸ்!

சென்னை: மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில், 5 நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

பிகில் இசை வெளியீட்டு விழாவில், ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், அதிகப்படியான ரசிகர்கள் அலையின்றி நடைபெற உள்ளது.

நேரில் ரசிகர்கள் அலை இல்லையென்றாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள நேரலையை கோடிக்கணக்கான ரசிகர்கள் காண காத்திருக்கின்றனர்.

அந்த மைக்கும்

அந்த மைக்கும்

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கே தடை விதிக்கப்படும் என்றும், திட்டமிட்டபடி விழா நடக்குமா? என்ற சந்தேகங்கள் எழுந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா சொல்லியடிக்கும் கில்லியாக இன்று மாலை நடைபெறுகிறது. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கான அரங்கங்கள் லீலா பேலஸில் அமைக்கப்பட்டு அந்த மைக்கும் தயார் நிலையில் இருக்கிறது.

மாஸ்டர் கம்மிங் ஒத்து

மாஸ்டர் கம்மிங் ஒத்து

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடைபெறும் லீலா பேலஸுக்கு நடிகர் விஜய், கோட் ஷூட் அணிந்து செம கெத்தாக ஹேண்ட்ஸம் ஆக வந்துள்ளார். மாஸ்டர் வெளியீட்டு விழாவில் வருகை தந்த பிரபலங்களையும் விஜய் வணக்கம் செலுத்தி வரவேற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஜிலு ஜிலுன்னு மாளவிகா

ஜிலு ஜிலுன்னு மாளவிகா

அரக்கு நிற காக்ரா சோலியில் க்யூட்டாகவும் கொஞ்சம் ஹாட்டாகவும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகை மாளவிகா அட்டென்டன்ஸ் போட்டுள்ளார். மாஸ்டர் படத்தில், விஜய் - மாளவிகா ரொமான்ஸில், யுவன் சங்கர் ராஜா குரலில் உருவாகியுள்ள அவ கண்ண பார்த்தாக்கா பாடலை கேட்க ரசிகர்கள் வெயிட்டிங்.

ஸ்டூண்ட் கெளரி பிரஸன்ட்

ஸ்டூண்ட் கெளரி பிரஸன்ட்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி ஜானுவாக பள்ளி மாணவியாக நடித்த நம்ம கெளரி கிஷன், இப்போ கல்லூரி மாணவியாக அப்கிரேட் ஆகியுள்ளார். மாஸ்டர் ஆடியோ லாஞ்சுக்கு ஸ்டூடண்ட் வரலைன்னா எப்படி அவரும் அழகா வந்து உள்ளேன் அய்யா என அட்டென்டன்ஸ் போட்டுள்ளார்.

விழா நாயகன்

விழா நாயகன்

இவர் வரலைன்னா இந்த விழாவே இல்லையே, மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத், க்யூட்டா டை எல்லாம் போட்டுக்கிட்டு செம சமத்துக்குட்டியா வந்திருக்காரு, வாத்தி கம்மிங் ஒத்து லிரிக்கல் வீடியோவில் இவர் போட்ட ஸ்டெப் ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், இன்னைக்கு லைஃப் பெர்ஃபார்மன்ஸும் பண்ணி அசத்த உள்ளார்.

மாஸ்டர் மேக்கர்

மாஸ்டர் மேக்கர்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜும் இசை வெளியீட்டு விழா மேடைக்கு வருகை தந்துள்ளார். மேலும், சாந்தனு, ஸ்ரீமன், சேத்தன், அர்ஜுன் தாஸ், விக்னேஷ் சிவன், ரத்னகுமார் உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X