மணி ஹெய்ஸ்ட்.. மணிரத்னம் படங்கள்.. ’மாஸ்டர்’ விஜய்யின் லாக்டவுன் எப்படியெல்லாம் போகுது தெரியுமா?

சென்னை: மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ரொம்பவே லாங் வெயிட் செய்து வருகின்றனர். தளபதி விஜய்யும் கூடத்தான்.

Recommended Video

சிம்பு Sister Anjali Rao Blessed with Baby Boy | Ramesh Tilak

இந்த லாக்டவுனில் வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வரும் நடிகர் விஜய் என்னவெல்லாம் செய்து வருகிறார் என்கிற சுவாரஸ்ய அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது.

நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸான மணி ஹெய்ஸ்ட் மற்றும் மனிரத்னம் படங்களை விரும்பி பார்த்து வருகிறாராம்.

அப்செட்டான ரசிகர்கள்

அப்செட்டான ரசிகர்கள்

ஏப்ரல் மாதம் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக, அந்த படத்தின் ரிலீஸ் ஒரே அடியாக தாமதம் ஆகி வருகிறது. ஓ.டி.டி. ரிலீஸ் இல்லை என்று விஜய் உறுதியாக இருப்பதால், தியேட்டர்கள் திறக்கும் வரை அந்த படத்தை ரசிகர்கள் பார்க்க வாய்ப்பில்லை.

நண்பர்களுடன் வீடியோ கால்

நண்பர்களுடன் வீடியோ கால்

கொரோனா லாக்டவுனில் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் தளபதி விஜய் தனது நண்பர்கள் மற்றும் மாஸ்டர் படக்குழுவினருடன் அவ்வப்போது வீடியோ காலில் பேசி மகிழும் புகைப்படங்களும் வெளியாகி வைராலனது குறிப்பிடத்தக்கது. குடும்பத்துடன் இந்த நேரத்தை பயனுள்ளதாக செலவிட்டு வருகிறார்.

மகன் வந்த சந்தோஷம்

மகன் வந்த சந்தோஷம்

கலிபோர்னியாவில் சிக்கித் தவித்து வந்த மகன் ஜேசன் விஜய்யை ஜூன் மாதத்தில் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், மகன், மகள் மற்றும் மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருகிறார் நடிகர் விஜய். மாஸ்டர் படத்தின் ரிலீஸ் காலதாமதம் ஆகி வரும் நிலையில், தளபதி 65 படத்துக்கும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகரின் மரணம்

ரசிகரின் மரணம்

தலைவனின் படம் பார்க்காமலே செல்கிறேன் என குடும்ப பிரச்சனை காரணமாக சமீபத்தில் விஜய் ரசிகர் பால என்பவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு போன் செய்து ஆறுதல் கூறிய விஜய், மகனுடன் மனம் விட்டு பேச மாட்டீங்களா என்றும் கண்டித்துள்ளார்.

லாக்டவுனில் என்ன செய்கிறார்

லாக்டவுனில் என்ன செய்கிறார்

இந்நிலையில், இந்த நீண்ட லாக்டவுனை தளபதி விஜய் எப்படி செலவு செய்கிறார் என்ற ரகசிய தகவல் கசிந்துள்ளது. நெட்பிளிக்ஸில் ஏப்ரல் மாதம் வெளியாகி உலகையே கலக்கிய மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸின் அனைத்து பாகங்களையும் கண்டு ரசித்து வருகிறாராம். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படங்களையும் பார்த்து ரசித்துள்ளாராம்.

மணிரத்னம் படத்தில்

மணிரத்னம் படத்தில்

பொன்னியின் செல்வன் படத்தை இயக்க முடிவு செய்த இயக்குநர் மணிரத்னம் முதலில், தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்துத் தான் உருவாக்க நினைத்து இருந்தார். கால்ஷீட் காரணமாக அந்த கனவு தள்ளிப் போக, தற்போது மற்ற முன்னணி நடிகர்களை வைத்து அந்த வரலாற்று படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். மணிரத்னம் படங்களை விஜய் விரும்பி பார்த்து வரும் தகவல் வெளியானதில் இருந்து, விரைவில் விஜய் - மணிரத்னம் காம்போ உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்?

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விநாயகர் சதுர்த்தி அன்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. மேலும், மாஸ்டர் படத்தின் டீசர் அல்லது டிரைலரையாவது விரைவில் வெளியிட வேண்டும் என்கிற ரசிகர்கள் கோரிக்கையும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X