எப்ப ரிலீஸ் ஆனாலும் 'மாஸ்டர்' பெரிய ட்ரீட்டா இருக்கும்.. ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் உறுதி!
சென்னை: 'மாஸ்டர்' படம் ஆக்ஷன் என்டர்டெயினராக இருக்கும் என்று அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
விஜய் நடித்துள்ள படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயின்.
சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கவுரி கிஷன், ரம்யா சுப்ரமணியன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

கொரோனா
சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த 9 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. அதற்கான வேலைகளில் படக்குழு இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டது.

தீபாவளிக்கு
ஊரடங்கு நீக்கப்பட்டாலும் உடனடியாக ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்களா என்பது சந்தேகமே என்பதால், இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, படம், ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் மாஸ்டர் வெளியாகிறது.

5 மொழிகளில்
லாக்டவுனை பயன்படுத்தி அதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் விஜய்யின் முதல் படம் இதுதான். இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசினார். அப்போது அவர் கூறும்போது, 'மாஸ்டர் படம் ஆக்ஷன் எண்டர்டெயினராக இருக்கும்' என்று தெரிவித்தார்.

ரிலீஸ் எப்போது?
அவர் மேலும் கூறும்போது, படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருப்பதால் சண்டைக் காட்சிகள் ஹைலைட்டாகவே இருக்கும். படத்தை பற்றி இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும். இதற்கு மேல் தகவல்களைக் கூற முடியாது. படத்தின் ரிலீஸ் பற்றி கேட்கிறார்கள். லாக்டவுன் இருப்பதால் அதுபற்றி இப்போது சரியாகக் கூற முடியாது.

பெரிய ட்ரீட்
அதற்கு சரியான நேரம் இதுவல்ல. படத்தின் ரிலீஸ் தேதி தெரியாமல் டிரைலரை வெளியிட முடியாது. அதனால்தான் டிரைலர், ரிலீஸ் பற்றிய எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. ஆனால், மாஸ்டர் எப்போது ரிலீஸ் ஆனாலும் இந்த படம் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக, கொண்டாட்டமாக இருக்கும். அதுமட்டும் உறுதி' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











