எடை குறைந்த ஆடை இயக்குநர்.. இந்த மாற்றத்திற்கு அந்த பெண் விஜே தான் காரணமாம்!

சென்னை: மேயாத மான், ஆடை படங்களின் இயக்குநர் ரத்னகுமார் மாஸ்டர் படத்திற்காக உழைத்து உழைத்து அதிகளவில் எடை குறைந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

லீலா பேலஸில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன நதி போல ஓடிக் கொண்டிரு குட்டி ஸ்டோரி மற்றும் நண்பர் அஜித் போல டிரெஸ் பண்ணிட்டு வந்தேன் என்பது வேற லெவலில் டிரெண்ட் ஆனது.

விஜய் பேச்சு

விஜய் பேச்சு

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ரத்னகுமார் குறித்தும் சில வார்த்தைகள் பேசியிருந்தார். மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய இயக்குநர், நினைச்சிருந்தா அடுத்த படம் பண்ணியிருக்கலாம். எதுக்கு மாஸ்டர் படத்துக்காக வொர்க் பண்ணனும் எல்லாமே ஒரு பாசிட்டிவிட்டி தான் என்றார்.

எடை குறைந்தது

எடை குறைந்தது

மாஸ்டர் பட பூஜையின் போது, 97 கிலோ எடையுடன் இருந்த ரத்னகுமார், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்காக, டெல்லி, கர்நாடகா மற்றும் சென்னை என பல இடங்களில் அலைந்து திரிந்து நடத்திய ஷூட்டிங்கால் உடல் இடை அதிகளவில் குறைந்து, மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் 79 கிலோவுக்கு குறைந்துள்ளார்.

விஜே ரம்யா

விஜே ரம்யா

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 97 கிலோ எடையில் இருந்து 79 கிலோ எடைக்கு மாறிய டிரான்ஸ்ஃபார்ம் புகைப்படத்தை பதிவிட்ட ரத்னகுமார், இதற்கு இன்ஸ்பயர் ஆக இருந்த விஜே ரம்யாவுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். ரத்னகுமார் இயக்கிய அமலா பாலின் ஆடை படத்தில் நடித்த விஜே ரம்யாவுக்கு மாஸ்டர் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பொறாமையா இருக்கு

பொறாமையா இருக்கு

மாஸ்டர் படம் குறித்த அப்டேட்களை அவ்வப்போது தளபதி ரசிகர்களுக்கு தெரிவித்து வரும் அப்டேட் கிங் ரத்னகுமார், இப்படி ஒரு இன்ஸ்டா பதிவை போட்ட அடுத்த நொடியே, விஜே ரம்யா ஆஜராகி, உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு, எப்படி இப்படி உடல் எடையை இவ்ளோ சீக்கிரத்தில் குறைச்சீங்க என பதிலுக்கு கேள்வி எழுப்பி ரசிகர்களை குழப்பியுள்ளார்.

கட்டிப்பிடித்த விஜய்

கட்டிப்பிடித்த விஜய்

ஞாயிற்றுக் கிழமை நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குறித்து அனல் பறக்க பேசிய இயக்குநர் ரத்னகுமாரை தளபதி விஜய் கட்டிப்பிடித்துப் பாராட்டிய புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரத்னகுமார் விஜய் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் அன்பையும் பெற்று வருகிறார்.

முத்தம் கொடுத்த சேது

முத்தம் கொடுத்த சேது

தளபதி விஜய் கட்டிப்பிடித்து பாராட்டிய நிலையில், முத்த மன்னன் விஜய்சேதுபதி, ரத்னகுமாரையும் விட்டு வைக்காமல் கட்டிப் பிடித்து கன்னத்தில் கிஸ் அடித்துள்ளார். அந்த அழகான தருணம் கொண்ட புகைப்படத்தையும் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, மக்கள் செல்வன் ரசிகர்கள் மத்தியிலும் டிரெண்டாகி வருகிறார் ரத்னகுமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X