மாஸ்டர் ரைட்டர் ரத்னகுமாரின் மகளதிகாரம்.. எப்படி குட் நைட் சொல்றாங்க பாருங்க.. செம க்யூட் வீடியோ!

Recommended Video

மாஸ்டர் ரைட்டர் ரத்னகுமாரின் மகள் குட் நைட் சொல்ற செம க்யூட் வீடியோ!

சென்னை: ஆடை படத்தின் இயக்குர் ரத்னகுமார் தனது மகளின் க்யூட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் எழுத்துப் பணிகளில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.

பொங்கல் விடுமுறையை குடும்பத்துடன் கழித்து வரும் ரத்னகுமார், தனது மகளின் க்யூட் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சினிமாக்காரர்களின் சாபம்

சினிமாக்காரர்களின் சாபம்

சினிமாவில் வேலை செய்தாலே குடும்பத்துடன் அதிகளவில் ஈடுபாடு வைத்துக் கொள்ள முடியாத சூழல் உருவாகி விடும். ஷூட்டிங்கிற்கு சென்று விட்டால், வீட்டைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. இது அனைத்து சினிமாக்காரர்களின் சாபமாக இருக்கிறது.

பாசமான தந்தை

பாசமான தந்தை

ஆடை படத்தின் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் ரைட்டருமான ரத்னகுமார் தனது பிஸி ஷெட்யூலுக்கு இடையே தற்போது பொங்கல் விடுமுறையை குடும்பத்துடன் கழித்து வருகிறார். ரத்னகுமார் கனிவான கணவர் மட்டுமின்றி பாசமான தந்தையும் ஆவார்.

மகளதிகாரம்

பொங்கல் விடுமுறையை கழித்து வரும் ரத்னகுமார் தனது செல்ல மகள் குரலினியாள் உடன் எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது மகளை குட் மார்னிங் சொல்ல சொல்ல, அவரது செல்ல மகள் கையை தலை அருகே தூக்கி வைத்து குட் மார்னிங் சிக்னல் காட்டுகிறது. வாயை திறந்து சொல் என ரத்னகுமார் சொல்ல, வெறும் வாயை மட்டும் திறந்து செம்ம க்யூட்டாக சிரிக்கிறது.

அப்டேட் கிங்

அப்டேட் கிங்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் அப்டேட் வேண்டும் என்று நினைக்கும் தளபதி ரசிகர்களுக்கு அடிக்கடி அப்டேட் சொல்லி குஷிப் படுத்தி வருகிறார் ரத்னகுமார்.

ஜாலியான நபர்

ஜாலியான நபர்

தளபதி ரசிகர்களுடன் சர்வ சாதாரணமாக ஜாலியாக பேசி வருகிறார் ரத்னகுமார். அவரது ட்வீட்களை தளபதி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும், ஆன்லைனுக்கு அவர் வந்தாலே மாஸ்டர் படத்தின் அப்டேட் ஏதாவது கொடுப்பாரா என்றே ரசிகர்கள் அவரை மொய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X