அனிருத் ரெடி.. விரைவில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா.. டிரெண்டாகும் #MasterAudioLaunch ஹாஷ்டேக்!

Recommended Video

Money Ceased from Thalapathy Vijay Home | AGS Entertainments | Master Shooting

சென்னை: நடிகர் விஜய் வீட்டில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது.

எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று வெளியான தகவலால், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று முதலே பல ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டன.

மாஸ்டர் படத்தின் ரைட்டர் ரத்னகுமார் நேற்று போட்ட ட்வீட், விரைவில் இசை வெளியீடு நடைபெறும் என்ற சிக்னலுக்கு வித்திட்டுள்ளதாக கூறியிருந்தோம்.

தற்போது, #MasterAudioLaunch என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இதுக்குத்தான் வெயிட்டிங்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாஸ் ஸ்பீச் கொடுத்திருந்தார் நடிகர் விஜய். தற்போது, நடைபெற்றுள்ள வருமான வரி துறை சோதனை குறித்தும், ஹேட்டர்கள் குறித்தும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை கேட்கத் தான் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை வெயிட்டிங்.

மீம் வைரலாகும் மீம்

கே.ஜி.எஃப் படத்தின் மாஸான வசனம் மீம் மெட்டீரியலாக வலம் வருகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை விசாரணை முடிந்த நிலையில், பிகில் படத்தின் கலெக்‌ஷனை வருமான வரித்துறை அறிவித்துள்ளதாக விஜய் ரசிகர் மீம் போட்டு மாஸ் காட்டி வருகின்றனர். டிரெண்டாகும் ஹாஷ்டேக்குகளில் ரசிகர்கள் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

தளபதி ரத்தங்களே

யாரையும் கஷ்டப்படுத்தி பார்க்க கூடாது, எல்லோரையும் மதிப்போம், சந்தோஷமா இருப்போம் தளபதி ரத்தங்களே என இந்த ரசிகர் இந்த பிரச்சனையை கடந்து போவோம் என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார். இவரது கருத்தை பல தளபதி ரசிகர்களும் ஆதரித்து கமெண்ட் செய்தும் லைக் செய்தும் வருகின்றனர்.

தனியா நின்று

தடைகளை எல்லாம் தனியாய் நின்று தகர்த்து வென்று புன்னகைக்கும் புதிய பாதையே.. இதயமாளும் அதிபதியே.. வாழ்க.. தலைவா என இந்த ரசிகர் செம்ம மாஸாக நடிகர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். ஐடி ரெய்டு பிரச்சனையில் இருந்து மிஸ்டர் க்ளீனாக விஜய் வெளியே வருவார் என ரசிகர்கள் நம்பிய நம்பிக்கை வீண் போகவில்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அனிருத் ரெடி

அனிருத் ரெடி

மாஸ்டர் இசை வெளியீடு அடுத்த மாதம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும், அதில் விஜய் என்ன குட்டி கதை சொல்லி யாரையெல்லாம் வச்சி செய்யப் போகிறார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இசையமைப்பாளர் அனிருத் சைலன்ட்டாக விவேக் வரிகளில் ஒரு கெத்தான மாஸ் ஓபனிங் பாடலை உருவாக்கி வருகிறாராம். இந்த மாத இறுதிக்குள் மாஸ்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி தெறிக்க விடப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விவேக் ட்வீட்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில், மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து தளபதி விஜய் படங்களுக்கு மாஸ் பாடல்களை எழுதி வரும் பாடலாசிரியர் விஜய், சர்கார் படத்தில் எழுதிய "டாப் டக்கர்" பாடல் வீடியோவை பகிர்ந்து "எதிர்த்தா அதுதான் என்னோட வளர்ச்சி" என்ற வரிகளை குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X