குளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1

சென்னை: கொரோனா காலக்கட்டத்தில் உலகளவில் படங்களை வெளியிட பல ஹாலிவுட் நிறுவனங்களே தயக்கம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் உலகளவில் கடந்த வாரத்தில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்கிற அந்தஸ்த்தை பெற்றுள்ளதாக மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பை தொடர்ந்து ட்விட்டரில் #MasterGloballyNo1 என்கிற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

வேற லெவல் ரெய்டு

வேற லெவல் ரெய்டு

முதல் மூன்று நாட்களில் உலகளவில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டிய தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் முதல் வார இறுதியில் கிட்டத்தட்ட 150 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு மாஸ்டர் வெளியான நிலையில், உலகளவில் வேற எந்தவொரு பெரிய படங்களும் ரிலீசாகாததால் வாத்தி ரெய்டு திரையரங்குகளில் வேற லெவலில் போய்க்கொண்டு இருக்கிறது.

50 சதவீதம் ஃபுல்

50 சதவீதம் ஃபுல்

நியூ நார்மலில் இனி ஹவுஸ்ஃபுல் என்பதற்கு பதிலாக 50 சதவீதம் ஃபுல் என்று தான் சொல்ல வேண்டும். பொங்கல் விடுமுறை முடிந்த பின்னரும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையான இன்றும் மாஸ்டர் திரைப்படம் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் டிக்கெட் கிடைக்காமல் ஹவுஸ்ஃபுல்லாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்பதான் சந்தோஷம்

இப்பதான் சந்தோஷம்

தியேட்டர் தொழிலே முடங்கி விடும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு இருந்த நிலையில், தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை பெரிதும் நம்பியிருந்த தியேட்டர் ஓனர்களுக்கு இப்போதுதான் கடந்த ஓராண்டு கழித்து உற்சாகமும் சந்தோஷமும் பொங்கி வழிவதாக பல தியேட்டர் அதிபர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.

குளோபலி நம்பர் ஒன்

குளோபலி நம்பர் ஒன்

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான எக்ஸ் பி கிரியேட்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி உள்ளிட்டோர் அந்த ட்வீட்டை ஷேர் செய்ய #MasterGloballyNo1 என்கிற ஹாஷ்டேக்கை தளபதி ரசிகர்கள் தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

பந்தயம் அடிக்க

பந்தயம் அடிக்க

கொரோனா நேரத்துல இறக்கி பந்தயம் அடிக்க தளபதியால தான் முடியும் என விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட போட்டோக்களையும், மீம்களையும் ஷேர் செய்து பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் மேக்கிங் புகைப்படங்களையும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

ஜேடியின் குட்டி ஸ்டோரிகள்

மாஸ்டர் திரைப்படத்தில் ஜேடி எனும் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். கல்லூரியில் ஒவ்வொரு நபரிடமும் ஒரு குட்டி ஸ்டோரி சொல்கிறேன் என தமிழ் சினிமாவில் வந்த பிரபலமான திரைப்படங்களில் இருந்து தளபதி விஜய் க்யூட்டாக சொல்லும் குட்டி ஸ்டோரிகளின் ஸ்நிக் பீக் காட்சியையும் படக்குழு வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X