மறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory
சென்னை: மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்று விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video
மேலும், கொரோனா பயத்தை தாண்டி மீண்டும் மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வர விஜய் தான் காரணம் என்றும் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
50 சதவீதம் இருக்கைகளுடனே இரண்டே வாரங்களில் மாஸ்டர் திரைப்படம் 200 கோடி வசூல் செய்துள்ளதாகவும் பிற மொழிகளில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் வசூல் வேட்டை செய்வதாகவும் டிரெண்ட் செய்கின்றனர்.

தியேட்டர் ஓனர்கள் ஹேப்பி
பொங்கல் பண்டிகை முடிந்து குடியரசு தின விழாவே நெருங்கி விட்டது. ஆனால், இன்னமும் பல இடங்களில் மாஸ்டர் திரைப்படத்திற்கு டிக்கெட்டே கிடைக்காத அளவுக்கு ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். மீண்டும் தியேட்டர்கள் புத்துயிர் பெற விஜய்யின் மாஸ்டர் படம் தான் காரணம் என்றும், தியேட்டர் ஓனர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் தொழிலாளிகள் என அனைவரையும் விஜய் சந்தோஷப்படுத்தி உள்ளார் என்று கொண்டாடி வருகின்றனர்.

மாணவர்களுடன் மாஸ்டர்
மாஸ்டர் படத்தின் ஜேடி எனும் ஜான் துரைராஜ் கதாபாத்திரத்தில் வாத்தியாராக விஜய் நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது மாணவர்களாக நடித்தவர்கள் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன.

பிளாக்பஸ்டர்
கிங் ஆஃப் கோலிவுட்டாக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் 2 வாரங்களில் 200 கோடி வசூலை தாண்டி வெற்றிநடை போட்டு வருகிறது. பிளாக்பஸ்டர் வெற்றி என மாஸ்டரை விஜய் ரசிகர்கள் தியேட்டர் ஓனர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.

குவியும் குடும்பங்கள்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை காண கொரோனா பயத்தையும் தாண்டி குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து வருகின்றனர் என ஏகப்பட்ட போட்டோக்களுடன் போஸ்ட்களை போட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

எல்லாம் யாரால
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தீபாவளிக்கு சில திரைப்படங்கள் வெளியான நிலையிலும் மக்கள் தியேட்டருக்கு வர தயங்கினர். சூர்யாவின் சூரரைப் போற்று தியேட்டருக்கு வந்திருந்தால், நல்லாவே ஓடியிருக்கும். ஆனால், ஒடிடி தளத்தில் அந்த படத்தை வெளியிட்டார். தியேட்டரில் தான் மாஸ்டரை வெளியிடுவேன் என இருந்த தளபதி விஜய்யால் தான் மீண்டும் ரசிகர்கள், குடும்பங்கள் எல்லாம் தியேட்டரை நோக்கி படையெடுக்கின்றனர் என தெறிக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











