வருமா.. வராதா.. டிரெண்டாகும் #MasterSecondSingle ஹாஷ்டேக்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! ஆனால்?

சென்னை: மாஸ்டர் செகண்ட் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ரசிகர்கள் #MasterSecondSingle ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி வேற லெவலில் டிரெண்டானது.

இந்நிலையில், இசை வெளியீட்டுக்கு முன்னதாக அடுத்த பாடல் எப்போது, வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

5 மணிக்கு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த கைதி படத்தில் பாடல்கள் இடம் பெறவில்லை. இந்நிலையில், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில், வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் உலகளவில் டிரெண்டாகி வருகிறது. இரண்டாவது பாடலுக்கான அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர லோக்கல்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளியான கத்தி படத்தைத் தொடர்ந்து, தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இசையமைத்து வருகிறார் அனிருத். ஃபர்ஸ்ட் சிங்கிளே, தளபதியின் குரலில் செம கிளாஸியா போட்டுள்ள அனிருத், அடுத்த பாடலை, தர லோக்கல் குத்தாக குத்தியுள்ளார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

தளபதி ரசிகை

இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ராஷி கண்ணா, பெரம்பலூரில் உள்ள தனலக்‌ஷ்மி ஸ்ரீனிவாசன் கல்லூரியில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, தான் ஒரு தீவிர தளபதி ரசிகை எனக் கூறியுள்ளார். அந்த வீடியோ க்ளிப்களையும் ரசிகர்கள் பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தளபதி 65 அப்டேட்

இன்று மாலை 5 மணிக்கு மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகும் என்றும், நாளை மாலை 5 மணிக்கு, தளபதி 65 படத்தை யார், இயக்கப் போறாங்க என்பது குறித்த அப்டேட்டும் வெளியாக உள்ளதாக இந்த தளபதி ரசிகர் வெறித்தனமான அப்டேட்டை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

லுங்கியில் விஜய்சேதுபதி

கைதி படத்தில், டெல்லி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி, லுங்கி கட்டிக் கொண்டு அதகளப் படுத்தினார். மாஸ்டர் படத்தில், நடிகர் விஜய்சேதுபதி, லுங்கிக் கட்டிக் கொண்டு லோக்கல் ஏரியா டானாக நடிக்கிறார், என்பது, சமீபத்தில், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுடன் எடுத்த இந்த புகைப்படத்தின் மூலமாக தெரிகிறது.

வெயிட்டிங் தலைவா

மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல், செம மாஸா, தர லோக்கல் குத்து சாங்கா இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து, தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், எப்போதுமே, சர்ப்ரைஸ் மியூசிக் போட்டு, அசத்தும் அனிருத், செகண்ட் சிங்கிளில் என்ன மேஜிக் செய்துள்ளாரோ என்பதை காண ரசிகர்கள் வெயிட்டிங்!

வருமா? வராதா?

இன்று மாலை 5 மணிக்கு மாஸ்டர் படத்தின் அப்டேட் வரும் என்ற தகவல் தீயாய் பரவ, விஜய் ரசிகர்களும், #MasterSecondSingle என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை. அதனால், இன்று மாலை 5 மணிக்கு அப்டேட் வருமா? வராதா? என்றும் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

ஆனால்?

ஆனால்?

மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகாது என்றே தெரிகிறது. அப்டேட் கிங் ரத்னகுமார் மற்றும் சாந்தனு இதுகுறித்து எந்த சிக்னலும் கொடுக்கவில்லை. மார்ச் முதல் வாரத்தில், செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்ற தகவல் தான் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து கிடைத்திருக்கிறது. வெயிட் பண்ணாலும், வொர்த்தா தான் இருக்கும் நண்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X