சுயஇன்ப காட்சிக்கு பஜனை பாடலா?: நடிகை, இயக்குனர் என்ன சொல்கிறார்கள்?

By Siva

Recommended Video

சுய இன்ப சீனுக்கு லதா மங்கேஷ்கர் குரலா?- வீடியோ

மும்பை: சுய இன்ப காட்சிக்கு பஜனை பாடல் போன்று கருதப்படும் பாடலை பயன்படுத்தியது குறித்து இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை கியாரா அத்வானி ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நெட்ஃபிளிக்ஸில் வெளியான தனது லஸ்ட் ஸ்டோரீஸ் குறும்படத்தில் நடிகை கியாரா அத்வானி சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியில் கபி குஷி கபி கம் பாடலை பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது.

சுயஇன்ப காட்சிக்கு பஜனை போன்று மதிக்கப்படும் பாடலை பயன்படுத்துவதா என்று அந்த பாடலை பாடிய லதா மங்கேஷ்கரின் குடும்பத்தார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விளக்கம்

விளக்கம்

லஸ்ட் ஸ்டோரீஸ் மூலம் சுயஇன்பம் அனுபவிப்பது பற்றி விவாதம் நடந்து வருகிறது. அந்த காட்சியை கலாய்க்கிறார்கள், திட்டுகிறார்கள் ஆனால் சுயஇன்பம் பற்றி பேசுகிறோம் என்பதே பெரிய விஷயம் என்கிறார் கரண் ஜோஹார்.

பேச்சு

பேச்சு

சுயஇன்பம் பற்றி பேசுவது பெரிய குற்றம் என்று மக்கள் நினைத்தனர். இந்நிலையில் இந்த படம் மூலம் மக்கள் சுயஇன்பம் பற்றி விவாதிப்பதை பார்க்க முடிகிறது என்று கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார்.

கியாரா

கியாரா

சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும், காமெடியாக நடித்துவிடாதீர்கள் என்று கரண் ஜோஹார் என்னிடம் கூறினார். நானும் அவர் சொன்னபடியே நடித்தேன் என்று கியாரா அத்வானி கூறியுள்ளார்.

தவறு

தவறு

பெண்கள் சுயஇன்பம் அனுபவிப்பது குறித்து பேசுவதை பாவம் என்று நினைத்த மக்கள் தற்போது சாதாரணமாக பேசுகிறார்கள். இந்த காட்சிக்கு போய் இவ்வளவு பெரிய சர்ச்சை எதற்கு என்று இனி வரும் காலங்களில் மக்கள் நினைப்பார்கள். ஒரு காலத்தில் முத்தக் காட்சிகள் பெரிய குற்றமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று முத்தக் காட்சிகள் எல்லாம் சாதாரணம் என்கிறார் கியாரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X