அண்ணன் மகனை காப்பாற்ற தன்னுடைய மகனை பறிகொடுத்த மாதங்கி... மனதை உலுக்கும் உடன் பிறப்பே!

சென்னை : நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாக வெளியாகியுள்ளது உடன்பிறப்பே.

கத்துக்குட்டி பட இயக்குனர் சரவணன் இயக்கத்தில் சசிகுமார்,சமுத்திரகனி சூரி,கலையரசன், சுஜி ரோஸ்,வேல ராமமூர்த்தி என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அண்ணன் மகனை காப்பாற்றுவதற்காக தன்னுடைய மகனை பறிகொடுத்த மாதங்கியின் பாசம் பார்க்கும் அனைவரின் மனதையும் உலுக்குகிறது.

 நேரடியாக ஓடிடியில்

நேரடியாக ஓடிடியில்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிகை ஜோதிகா நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்பொழுது கத்துக்குட்டி பட இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 ஜோதிகாவுக்கு 50வது திரைப்படமாக

ஜோதிகாவுக்கு 50வது திரைப்படமாக

கிராமத்து அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் ஜோதிகாவுக்கு 50வது திரைப்படமாக வெளியாகி உள்ளது. சசிகுமார் சமுத்திரகனி,கலையரசன், நிவேதிதா, வேலராமமூர்த்தி, சூரி என பலர் இந்த படத்தில் நடித்திருக்க ஜோதிகாவின் கணவராக சமுத்திரகனி நடித்துள்ளார். எந்த வம்பு சண்டைக்கும் போகாமல் எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாத கண்ணியமான ஆசிரியராக நேர்த்தியாக நடித்துள்ளார்.

 கோவக்கார அண்ணனாக

கோவக்கார அண்ணனாக

சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்திற்கு அப்படியே நேரெதிராக சசிகுமார் கிராமத்தில் எங்கெல்லாம் தவறு நடக்கிறதோ அனைவரையும் பொளந்து கட்டி அப்போதே தட்டிக் கேட்கும் கோவக்கார அண்ணனாக நடித்துள்ளார். ஜோதிகா மற்றும் சசிகுமார் வரும் காட்சிகள் பார்க்கும் அனைவரையும் கண் கலங்க வைக்கிறது.

 சசிகுமாரை அப்படியே பின்பற்ற

சசிகுமாரை அப்படியே பின்பற்ற

சமுத்திரகனியின் மகன் சிறுவயதிலிருந்தே சசிகுமாரை அப்படியே பின்பற்ற அவரைப்போலவே கோபக்காரராக வளர்கிறார். ஒரு கட்டத்தில் சக நண்பர்களுடன் விளையாட்டில் ஏற்பட்ட சண்டை காரணமாக அவரை துரத்திச் செல்லும் போது கிணற்றில் விழுவதை பார்த்த சசிகுமாரின் மகனும் கிணற்றில் விழுகிறார். இதைப்பார்த்த ஜோதிகா குழந்தைகளை காப்பாற்ற அவரும் கிணற்றில் குதிக்கிறார்.

 .தன்னுடைய மகனை பறிகொடுத்து

.தன்னுடைய மகனை பறிகொடுத்து

ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல் கிணற்றுக்குள் தவிக்கும் ஜோதிகா இருவரையும் காப்பாற்ற முடியாமல் ஒரு கட்டத்தில் தன்னுடைய மகனை பறிகொடுத்துவிட்டு அண்ணனின் மகனை காப்பாற்றுகிறார். சமுத்திரக்கனி சுகுமாரின் முன் கோபத்தை பார்த்து அப்படியே வளர்ந்த தன்னுடைய மகன் அதனால்தான் இறந்ததாக இரு குடும்பத்திலும் பிரிவு ஏற்படுகிறது.

 மனதில் இடம் பிடித்த மாதங்கி

மனதில் இடம் பிடித்த மாதங்கி

கிராமத்து மண் வாசனை மாறாமல் அப்படியே நம் கண்களுக்குள் காட்டியுள்ள இந்த அண்ணன் தங்கை பாசத்தில் தன்னுடைய மகனை பறிகொடுத்து அண்ணனின் மகனை காப்பாற்றிய மாதங்கியின் அந்த செயல் பார்க்கும் அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X