டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் “மத்தகம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு

இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும் DD நடிப்பில் உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் "மத்தகம்" வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. Screen Scene Media Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது

இந்நிலையில் மத்தகம் சீரிஸின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

Mathagam Webseries Pressmeet

நடிகர் மணிகண்டன் பேசியதாவது, என்னுடைய சிறு சிறு முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்த பத்திரிக்கையாளர்களுக்கு எனது நன்றி. இந்த சீரிஸ் பொறுத்த வரை எனக்கு மிகவும் எதிர்பார்ப்புக்கு மீறிய கதாபாத்திரம். இந்த சீரிஸின் படப்பிடிப்பு இரவில்தான் அதிகம் நடைபெற்றது. இயக்குநரின் உழைப்புதான் அந்த நேரத்திலும் எங்களை ஊக்குவித்தது. இந்த சீரிஸில் பல பல சிறு கதாபாத்திரங்கள் உள்ளது. ஆனால் சிறு கதாபாத்திரம் என்றாலும் அதற்கென தனி மெனக்கெடலைக் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் இடைவிடாத பணியைக் கொடுத்துள்ளனர். இந்த படைப்பைப் பார்த்த பிறகு எங்களின் உழைப்பை விட இயக்குநரின் உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் எங்களுக்குத் தோன்றியது. கண்டிப்பாக உங்களுக்கும் இது மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் நன்றி.

நடிகர் அதர்வா பேசியதாவது...

மத்தகம் இப்ப ரிலீஸாகுது, ஆனா இது 2018, 19 ல ஆரம்பிச்சது. கௌதம் மேனன் சார் தான் இயக்குனர் பிரசாத் முருகேசனை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கதை முதல்ல பைபிள் பேர்ல இருந்தது. பல மாற்றங்கள் வந்தது. எப்படி வரப்போகுதுன்னு தயக்கம் இருந்தது. இப்ப வரக்காரணம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான், அவங்களுக்கு ரொம்ப நன்றி. பிரசாத் சார் இந்தக் கதையை குயினுக்கு முன்னாடியே எழுதிட்டார். மத்தகம் கதை ரொம்ப சூப்பரா வந்திருக்கு. அவர் நினைச்சத கொண்டு வந்துருக்காரு. முழுக்க நைட்ல தான் ஷீட் பண்ணோம். லைட் ஆஃப் பண்ணி எடுத்தாங்க, நான் தெரிவனா தெரிய மாட்டேனானு சந்தேகமா இருந்தது. ஆனா நான் நடிச்சதில பெஸ்ட்டாக இருக்கும். இப்ப நான் எங்க போனாலும் மணிகண்டன் பத்தி கேட்குறாங்க. அவர் கூட 2 நாள் தான் ஷூட் அப்பவும் தனித்தனியா வச்சு எடுத்தாங்க. உண்மையில மணி ரொம்ப ஹானஸ்டான மனிதர் அவர் கூட வேலை பார்த்தது சந்தோசம். டிஸ்னி+ ஹாட்ஸ்டார்ல வருது பார்த்து ஆதரவு தாங்க.

இந்த சீரிஸுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். இந்த சீரிஸ் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X