முதல் மனைவியுடன் ஜாலி மோடில் மாதம்பட்டி ரங்கராஜ்.. ஜாய் கிரிஸில்டா பார்த்தால் காண்டாகிடுவாங்களே
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஜாய் கிரிஸில்டாவுக்கும் நடந்த இரண்டாவது திருமணம் பெரிய பரபரப்பை தமிழ் திரைத்துறையில் ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தை பிறந்த பிறகாவது இந்தப் பிரச்னை முடியும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கொண்டு மேற்கொண்டு நீண்டுகொண்டே செல்கிறது. ஜாய் கிரிஸில்டா தினமும் ஒரு போஸ்ட்டை போட்டுக்கொண்டே இருக்க; மாதம்பட்டியாரோ சைலெண்ட் மோடுக்கு போய்விட்டார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும்; வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாய் கிரிஸில்டாவுக்கும் ரகசியமாக இரண்டாவது திருமணம் நடந்தது. ஆனால் ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததிலிருந்து இவ்விவகாரம் பற்றிக்கொண்டு எரிகிறது. கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தும் இந்தப் பிரச்னை ஓய்ந்தபாடில்லை.
ரங்கராஜின் விளக்கம்: மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையின்போது இரண்டாவது திருமணத்தை ஒத்துக்கொண்டதாகவும், பிறந்த குழந்தையை ரங்கராஜ் ஏற்றுக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையிலோ, "நான் ஜாய்யை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.

அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்: ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ.1,50,000 பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI செலுத்த வேண்டும் என்றும் கோரினார், நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று டிஎன்ஏ டெஸ்ட்டில் நிரூபிக்கப்பட்டால் அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது" என தெரிவித்திருந்தார்.
விடாத ஜாய் கிரிஸில்டா: மாதம்பட்டியின் இந்த அறிக்கை பெரிய ட்விஸ்ட்டை ஏற்படுத்த கொதிப்படைந்துவிட்டார் ஜாய் கிரிஸில்டா. அதனால் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரங்கராஜ் தொடர்பான போஸ்ட்டுகளை போடுவதை வாடிக்கையாக்கினார். அவர் கொஞ்சி பேசிய வீடியோ, அனுப்பிய மெசேஜ்கள் என அனைத்தையுமே வெளியிட; இந்த விவகாரம் சிந்துபாத் கதை போல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் ரங்கராஜோ தனது வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
ரங்கராஜ் போட்ட போஸ்ட்: இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இரண்டு பேரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, இவ்விவகாரத்தில் கடைசிவரை தன்னுடைய கணவருக்கு அரணாக இருப்பேன் என ஸ்ருதி சபதம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











