விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்! #Mathare

Recommended Video

Bigil Atlee Salary : பிகில் படத்துக்கு அட்லிக்கு இவ்ளோ சம்பளமா?-வீடியோ

சென்னை: பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள மாதரே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய், அட்லீ, ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ள படம் பிகில். இந்தப்படத்தின் பணிகள் முழுவதும் முடிந்து சென்சார் ஃபார்மாலிட்டிஸும் நிறைவடைந்துவிட்டது.

படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. பிகில் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அறிவித்துள்ளது.

மாதரே பாடல்

மாதரே பாடல்

ஆனாலும் படத்தின் கதை தங்களுடையது என பலரும் உரிமைக்கோரி வருவதால் படம் சொன்னபடி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் உள்ளது. அண்மையில் படத்தில் ட்ரெயிலர் வெளியான நிலையில் பிகில் படத்தின் மாதரே பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

3 லட்சம் வியூஸ்

படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி இப்பாடலின் லிரிக்கல் வீடியோவை இன்று மாலை வெளியிட்டார். வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளேயே யூட்யூப்பில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். மாதரே பாடலை பின்னணி பாடகி சின்மயி பாடியுள்ளார். மாதரே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ட்ரென்டிங்கில் டாப்

ட்ரென்டிங்கில் டாப்

மேலும் விஜய் ரசிகர்கள் மாதரே என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த மாதரே ஹேஷ்டேக் தேசியளவில் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.

எப்படி பார்க்கிறது

மாதரே பாடல் இந்த சமூகம் ஒரு பெண்ணை எப்படி பார்க்கிறது என்பதை தைரியமாக சொல்கிறது என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

நெஞ்சைதொடும் எமோஷனல்

மாதரே.. என்ன அற்புதமான வரிகள்.. இதயத்தை தொடும் எமோஷனல்.. அற்புதம்.. தளபதி தீபாவளிக்காக காத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X