twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையில் தெரியும் கணித மேதை “ராமனுஜன்” வாழ்க்கை!

    |

    சென்னை: கணிதத்தில் தலைசிறந்த மேதையாக விளங்கிய ராமனுஜர் பற்றிய திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    இத்திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் ராமனுஜர் பற்றிய சில உண்மைகளை நாமும் பார்க்கலாம். அத்திரைப்படத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

    இந்தியாவில் அறிவு ஜீவிகளாகப் பிறப்பவர்களுக்கு கிடைப்பதோ வலிகள்தான் என்பதை இப்படம் அப்பட்டமாக பிரதிபலித்துக் காட்டியுள்ளது.

    கணிதத்தின் தலைவர்:

    கணிதத்தின் தலைவர்:

    கணித மேதை என்று பிரிட்டிஷ் கணித நிபுணர் ஹார்டியால் அன்புடன் அழைக்கப்பட்டவர்தான் ராமனுஜன். இதில் கூட நாம் ஒன்றும் அவரை அப்படி முதலில் அழைக்கவில்லை என்பதுதான் உண்மை.

    7 வயதிலேயே கணிதப்புலமை:

    7 வயதிலேயே கணிதப்புலமை:

    ஸ்ரீநிவாச ராமனுஜன்....1887இல் கும்பகோணத்தில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தவர். 7 வயதிலேயே அவருடைய அசாத்திய கணிதப் புலமையால் கல்வி உதவி பெற்றவர்.

    கல்வியில் தோல்வி:

    கல்வியில் தோல்வி:

    கணிதத்தின் மேல் தீராக் காதல் கொண்ட ராமனுஜர் தன்னுடைய கல்லூரிக் கல்வியில் தோல்வி அடைந்தவர் என்றால் உங்களால் நம்ப இயலாதுதான்.

    புரட்டிப் போட்ட தருணம்:

    புரட்டிப் போட்ட தருணம்:

    இதன்பின்னர் 1912 ஆம் ஆண்டில் மாத ஊதியம் தரும் கிளார்க் வேலையில் சேர்ந்தார். அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்ட தருணம் அப்போதுதான் துவங்கியது. அவருடைய கணித கோட்பாடுகளைப் படித்த ஜி.ஹெச் ஹார்டி வியந்தே போனார்.

    பழமையால் பாழான வாழ்க்கை:

    பழமையால் பாழான வாழ்க்கை:

    ஆனால், பழமைவாதிகளின் குடும்பத்தில் பிறந்ததாலும், பிராமணர்கள் கடல் தாண்டிப் போவதே மகாப்பாவம் என்ற இற்றுப்போன வரைமுறைகளாலும் ஒரு மகா சாதனையாளன், மண்குடிசையாய் சரிந்தே போனான் என்பதுதான் ராமானுஜரின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம்.

    காசநோயால் மரணம்:

    காசநோயால் மரணம்:

    தன்னுடைய 32 வயதில் காசநோய் பாதிப்பால் மரணமடைந்த அந்த மகாமேதை ராமனுஜன் தான் இன்றைய ஏடிஎம் அட்டையின் சூத்திரத்திற்கே சூத்திரதாரி என்றாலும் நீங்களெல்லாம் நம்பப் போவதில்லை.

    ஞானராஜ சேகரனின் படம்:

    ஞானராஜ சேகரனின் படம்:

    பாரதி, மோகமுள் போன்ற படங்களை இயக்கிய ஞானராஜ சேகரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ராமனுஜராக பிரபல நடிப்புத் தம்பதிகளான ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரன் அபிநவ் வாழ்ந்துள்ளார். இது இவருக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் என்றே கூறவேண்டும்.

    ராமனுஜன் – ஒரு சகாப்தம்:

    ராமனுஜன் – ஒரு சகாப்தம்:

    ஒரு சகாப்தத்தின் வாழ்க்கையை இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு நம்மால் திரையிலாவது இதன் மூலம் காட்டமுடிந்ததே என்பதுதான் நமக்கான ஆறுதல்.

    English summary
    Mathematics legendry Ramanujan’s life history showed in big screen today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X