Leo in LCU - லியோ LCUவில்தான் வருகிறதா... உறுதி செய்த நடிகர்?.. ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: Leo in LCU (எல்சியூவில் வருகிறதா லியோ) லியோ படம் குறித்து மாத்யூ தாமஸ் பேசியதை தொடர்ந்து எல்சியூவில் கனெக்ட் ஆவது உறுதி என ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர்.

மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் மீண்டும் இணைந்திருக்கிறது. விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Mathew Thomas Opens up About Leo and LCU

பாராட்டை பெற்ற படக்குழு: லியோ படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. காஷ்மீரில் நடந்த ஷூட்டிங் தொடர்பாக லியோ படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் நடிகர், நடிகைகள், இயக்குநர்களை மட்டும் காட்சிப்படுத்தாமல் படத்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்களை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது படக்குழுவுக்கு பாராட்டை பெற்றுக்கொடுத்தது.

சென்னையில் ஷூட்டிங்: காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழுபிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு சில வாரங்கள் மும்முரமாக படப்பிடிப்பை நடத்தியது. அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை பையனூரில் ஷூட்டிங் நடந்துவருவதாகவும், அங்கு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது. பையனூர் ஷெட்யூலை முடித்துவிட்டு லியோ படக்குழு மீண்டும் ஸ்டூடியோவுக்குள் ஷூட்டிங்கை தொடங்குகிறது.

எல்சியூவில் வருகிறதா லியோ?: படம் குறித்து எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தாலும் முதல் எதிர்பார்ப்பாக இருப்பது லியோ லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருமா என்பதுதான். விக்ரம் படத்தில் சினிமாட்டிக் யுனிவர்ஸை பயன்படுத்தி திரைக்கதையில் பெரும் மேஜிக் நிகழ்த்தியதால் அதே ஃபார்முலா இதிலும் தொடர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதுகுறித்து சிறு தகவல்கூட வெளியாகவிடாமல் படக்குழு ரொம்பவே கவனமாக இருக்கிறது.

Mathew Thomas Opens up About Leo and LCU

மாத்யூ தாமஸ் கொடுத்த அப்டேட்: இந்நிலையில் படத்தில் நடித்திருக்கும் மலையாளர் நடிகர் மாத்யூ தாமஸ் பேசுகையில், "நான் முதலில் பயப்பட்டேன். நான் லோகேஷ் கனகராஜ் சாரிடம் எனது சிரமங்களை எடுத்துரைத்து, எனது நிலையை புரியவைத்தேன். எனக்கு தமிழ் தெரியாது என்று நான் அவரிடம் தொடர்ந்து கூறுவேன். ஆனால் லோகேஷ் சார் எனக்கு நிறைய நேரம் கொடுத்தார், மேலும் அவர் செட்டில் நிறைய ஆறுதல் அளித்தார், அதனால் நடிப்பது எளிதாகிவிட்டது" என்றார்.

எல்சியூ அப்டேட்: இதனையடுத்து அவரிடம் லோகேஷ் கனகராஜின் எல்சியூவில் பங்கெடுப்பது எப்படி இருக்கிறது என பத்திரிகையாளர்கள் கேட்கையில் மாத்யூ தாமஸ் சிரித்தபடி 'அடிபொலி'என்றார். இதனை பார்த்த ரசிகர்கள், லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் குறித்த கேள்விக்கு சிறப்பாக இருக்கிறது என மாத்யூ கூறியிருப்பதன் மூலம், லியோ எல்சியூவில் கனெக்ட் ஆவதை மறைமுகமாக அவர் சொல்கிறாரோ என கேள்வி எழுப்புகின்றனர். மேலும் அப்படி வந்தால் தங்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமையும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X