என்னடா காந்தாரா 2 படத்தையே ஓட்டுறீங்க.. டிரெண்டாகும் மேக்ஸ்வெல்லின் செம மாஸ் வீடியோ.. வொர்த்துதான்!

சென்னை: வெறும் 128 பந்துகளில் டபுள் செஞ்சுரி அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல். அவரது பெயரை போலவே மேக்ஸிமமாக விளையாடி அந்த அணியை வெற்றிப்பெற செய்து அசத்தி உள்ளார்.

ஆப்கனிஸ்தான் அணி என சாதாரணமாக நினைத்து ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு கண்ணில் விரல் விட்டு ஆட்டி மரண பயத்தை ஆப்கனிஸ்தான் அணி தங்களது திறமையான ஆட்டத்தால் காட்டி விட்டனர்.

Maxwell double century efforts mixed with Kantara video trending

ஆனாலும், ஆஸ்திரேலியாவுக்கு நான் இருக்கேன் டா என இறங்கி அடித்த மேக்ஸ்வெல் கடைசியாக காந்தாரா படத்தையே ரசிகர்களுக்கு கண் முன் காட்டி உள்ளார்.

டபுள் செஞ்சுரி: ஒரு செஞ்சுரி அடிக்கவே போட்டியாளர்களுக்கு போதும் போதுமென ஆகிவிடும். இந்நிலையில், ஒரு இக்கட்டான சூழலில் அடித்து ஆட வேண்டிய சூழலில் கிளென் மேக்ஸ்வெல் பவுண்டரிகளில் சும்மா பந்தை பறக்கவிட்டு 128 பந்துகளிலேயே டபுள் செஞ்சுரி போட்டு ஆப்கனிஸ்தானின் வெற்றி ஆசையில் மொத்தமாக மண்ணை அள்ளி போட்டு விட்டார்.

விடாமுயற்சி: ஒரு கட்டத்துக்கு மேல் மேக்ஸ்வெல்லால் ரன் எடுக்க கூட ஓடமுடியாத சூழ்நிலையில், ஒரே இடத்தில் நின்று கொண்டு தீபாவளிக்கு முன்னதாகவே வாணவேடிக்கையை காட்டி இந்திய ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி விட்டார். தனது விடாமுயற்சி காரணமாக முடியாத நிலையிலும் வெற்றியை தன் வசமாக்க்க முடியும் என முயற்சி செய்த மேக்ஸ்வெல்லை உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

காந்தாரா 2: சோர்வில் உடலில் இருந்த மொத்த சக்தியும் வற்றி கீழே விழுந்து மேக்ஸ்வெல் ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் எழுந்து வந்து விளையாடி பெற்ற நிலையில், அந்த காட்சியை வைத்து ரசிகர்கள் காந்தாரா படத்தில் அந்த குல தெய்வம் வந்து "புஹான்னு" எழுப்பி நாயகனை ஓட வைக்கும் விதமாக இருந்ததாக செய்யப்பட்ட எடிட் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் காந்தாரா 2வே இதுதான் என கமெண்ட் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X