Box Office: மே 1 ரிலீஸான படங்கள்.. வசூலில் முதலிடத்தை பிடித்தது யாரு?.. சரிவில் சூர்யாவின் ரெட்ரோ?
சென்னை: இந்த ஆண்டு உழைப்பாளர் தினத்தை கொண்டாடும் விதமாக பல பெரிய படங்கள் மே 1ம் தேதி நாடு முழுவதும் வெளியாகின. பாலிவுட்டில் அஜய் தேவ்கனின் ரெய்டு 2, டோலிவுட்டில் நானியின் ஹிட் 3, தமிழில் சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசிகுமார் உள்ளிட்ட படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் போட்டிப் போட்டன.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் தான் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த படத்தை கம்பேர் செய்தால் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வசூல் ரொம்பவே குறைவு தான்.

ஆனால், இந்த ஆண்டு இதுவரை வெளியான பெரிய தமிழ் படங்களை வசூலில் ரெட்ரோ திரைப்படம் முந்தியதா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. மேலும், நானியின் ஹிட் 3 படம் அளவுக்கு கூட சூர்யாவின் ரெட்ரோ வசூல் செய்யவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 மற்றும் ரெய்ட் 2 உள்ளிட்ட மே தின ரிலீஸ் படங்களின் வசூல் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
ரெய்டு 2 வசூல்: ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன், வாணி கபூர், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான ரெய்டு 2 திரைப்படம் கடந்த மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகளவில் திங்கட்கிழமையான நேற்றோடு 98.25 கோடி வசூலை இந்த படம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 100 கோடி வசூலை கடந்திருக்கும் என்றும் கூறுகின்றனர். இந்தியளவில் 71.25 கோடி ரூபாய் தான் இந்த படம் வசூல் செய்துள்ளதாம். திங்கட்கிழமையான நேற்று 70 சதவீத வசூல் குறைந்துள்ளது அஜய் தேவ்கன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

100 கோடி கடந்த ஹிட் 3: சைலேஷ் கொலனு இயக்கத்தில் நானி, கார்த்தி, ஸ்ரீனிதி ஷெட்டி நடித்த ஹிட் 3 திரைப்படம் 101 கோடி வசூலை 4 நாட்களில் அள்ளியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. Sacknilk இணையதளத்தில் திங்கட்கிழமையான நேற்று இந்தியளவில் வெறும் 4.15 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியளவில் ஹிட் 3 படம் 56.30 கோடி தான் வசூல் வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் 5 நாட்களில் 107 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கட்கிழமை டிராப்பான ரெட்ரோ வசூல்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, சுவாஸிகா, நாசர், பிரகாஷ் ராஜ், விது, ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்த ரெட்ரோ திரைப்படமும் சூர்யாவுக்கு பெரிய பாக்ஸ் ஆபீஸ் படமாக மாறவில்லை என்பது ரசிகர்களையும் தமிழ் சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திங்கட்கிழமையான நேற்று வெறும் 3.38 கோடி மட்டுமே இந்தியளவில் ரெட்ரோ வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக இந்த படம் உலகளவில் 75 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 100 கோடி ரூபாய் வசூலை 2வது வார இறுதியிலும் படம் பெரிதாக வசூலித்தால் தான் கடக்கும் என்கின்றனர். 2டி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மே 1 வின்னர் யாரு?: இந்த மே 1ம் தேதி வெளியான படங்களில் நானியின் ஹிட் 3 தான் அதிக வசூலை பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டதன் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால், அந்த படமும் சிறப்பான படமில்லை என விமர்சகர்கள் கழுவி ஊற்றியுள்ளனர். சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வர இதுவரை 12.90 கோடி வசூலை அந்த படம் கடந்துள்ளது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











