இந்த வார ரிலீஸ்.. பலத்த போட்டிக்கிடையே வெளியாகும் 4 படங்கள்!

By Vignesh Selvaraj

Recommended Video

இந்த வாரம் என்னென்ன படம் ரிலீஸ்?- வீடியோ

சென்னை : இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் எதுவுமே சொல்லிக்கொள்ளும்படியான பெரும் வெற்றியைப் பெறவில்லை.

இடையே 48 நாட்கள் ஸ்ட்ரைக் காரணமாக படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் தமிழ் சினிமா இந்த ஆண்டுக்கான வெற்றிக்கணக்கை இன்னும் துவக்கவில்லை.

இந்த வாரம் தான் ஸ்டார் படங்கள் ரிலீஸ் ஆவதால் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் பற்றிய குறிப்பை பார்க்கலாம்.

பெரிய வெற்றிபெறவில்லை

பெரிய வெற்றிபெறவில்லை

ஸ்ட்ரைக் நிறைவடைந்தபிறகு வெளியான 'மெர்க்குரி', 'பக்கா', 'தியா' உள்ளிட்ட படங்களும் மிகுந்த வரவேற்பைப் பெறவில்லை. கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அடல்ட் படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் தான் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி வசூல் அள்ளி வருகிறது.

மே 11 ரிலீஸ்

மே 11 ரிலீஸ்

ஸ்ட்ரைக்குக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் மூன்று படங்கள் என வரைமுறைப்படுத்தி புதிய படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தால் ஒழுங்குபடுத்தல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கமிட்டியே படங்களை ரிலீஸுக்கு அனுமதித்து வருகிறது.

இந்த வார ரிலீஸ்

இந்த வார ரிலீஸ்

அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை அன்று தமிழில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றன. விஷால், சமந்தா நடித்துள்ள 'இரும்புத்திரை', அருள்நிதி நடித்திருக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள், அரவிந்த்சாமி, அமலாபால் நடித்துள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

மே 11

மே 11

அவை தவிர, நாளை (மே 9) கீர்த்தி சுரேஷ், சமந்தா, துல்கர் சல்மான் ஆகியோர் நடித்துள்ள சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'மகாநதி' ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படம் தமிழில் வரும் வெள்ளிக்கிழமை (மே 11) அன்று 'நடிகையர் திலகம்' என்ற டைட்டிலோடு வெளியாகிறது.

விஷால்

விஷால்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடித்துள்ள 'இரும்புத்திரை' திரைப்படம் சைபர் வார் எனும் தகவல் தொழில்நுட்ப போர் பற்றியதாக உருவாகியிருக்கிறது. சைபர் குற்றங்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை சீரியஸாக இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரொமான்ஸ் ஆக்‌ஷன் கலந்த கமர்சியல் படமாக இது இருக்கும்.

அருள்நிதி

அருள்நிதி

அருள்நிதி - மஹிமா நம்பியார் நடிப்பில், மு.மாறன் இயக்கியுள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சீட் நுனிக்கு வரவழைக்கும் பல காட்சிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி

மலையாளத்தில் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீமேக்கை தமிழில் அரவிந்த்சாமி, அமலாபால் ஆகியோரை வைத்து இயக்கியுள்ளார் சித்திக். மாஸ்டர் ராகவன், பேபி நைனிகா ஆகியோர் அர்விந்த்சாமியின் மகன், மகளாக நடித்துள்ளனர்.

நடிகையர் திலகம்

நடிகையர் திலகம்

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நிருபர்களாக நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழில் மிகுந்த எதிர்பார்ப்போடு ரிலீஸாகிறது இந்தப் படம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X