2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு
சென்னை: 2 ஆண்டுகள் கழித்து வடிவேலு இன்று படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
கோலிவுட்டில் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்தவர் வடிவேலு. அவரும், விவேக்கும் காமெடியில் கொடி கட்டிப் பறந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தது.
தேர்தலில் போட்டியிட்ட திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்தார் வடிவேலு.

வாயால் வந்தது வினை
பிரச்சாரத்தில் வடிவேலு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை காச்சு காச்சுன்னு காச்சி எடுத்தார். தேர்தல் முடிந்து திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. மேலும் தேமுதிக எதிர்கட்சி ஆனது. அத்தோடு வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு பிரச்சனையும் வந்தது. அவரை ஒப்பந்தம் செய்ய யாருமில்லாமல் போனது. பட வாய்ப்புகள் இல்லாமல் போயின.

2 ஆண்டுகளாக படமே இல்லை
தேர்தல் விவகாரத்தால் வடிவேலு கடந்த 2 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

மீண்டும் வடிவேலு
2 ஆண்டுகளாக கேமராவுக்கு முன்பு வராத வடிவேலு ‘ஜெகஜால புஜ பல தெனாலிராமன் என்ற படத்தில் அதுவும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

நாளை படப்பிடிப்பு துவக்கம்
ஏ.ஜி.எஸ். என்டர்டெய்னர்ஸ் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. நாளை வடிவேல் நடிக்கும் காட்சிகள் ஏவிஎம் ஸ்டியோவில் படமாக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











