Bigg Boss Tamil 7: கண் கலங்கி அழுத பூர்ணிமா.. கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய மாயா.. வீக்கென்ட் டிராமா?
சென்னை: இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்பது தெரியாமல் கடைசி நேரத்தில் நிக்சன், அர்ச்சனா, மாயா, பூர்ணிமா எல்லாம் தங்கள் பர்ஃபார்மன்ஸை ரொம்ப ஹெவியாகவே காட்டி வருகின்றனர்.
பூர்ணிமாவை எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க என விஷ்ணு வெளியே பேசிக் கொண்டதை எல்லாம் டாஸ்க்கில் ரீ என்ட்ரி கொடுத்த விஜய் வர்மா இதுதான் சாக்கு என போட்டு உடைத்து விட்டார்.

தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமாவுக்கு எதிரான அழுத்தம் அதிகரித்து வந்த நிலையில், அவர் உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்.
தப்புத் தப்பாக: மாயாவை லெஸ்பியன் என பேட்டி ஒன்றில் சுசித்ரா சொன்னது பெரும் சர்ச்சையை சோஷியல் மீடியாவில் கிளப்பியது. தொடர்ந்து மாயாவும் பூர்ணிமாவும் ஒன்றாக இருந்து வரும் நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன. இருவரை பற்றியும் தப்பாக தப்பாக வெளியே பேச ஆரம்பித்து விட்டனர். இதையெல்லாம் தெரிந்துக் கொண்டு உள்ளே நுழைந்த விஜய் வர்மா பூர்ணிமா மனசு புண்படும்படி எல்லாவற்றையும் போட்டு உடைத்து விட்டார்.

கதறி அழுத பூர்ணிமா: பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு கட்டத்தில் போட்டியாளர்கள் கதறி அழும் காட்சிகள் தான் பெரிய கன்டென்டாக மாறி வருகிறது. இந்நிலையில், புல்லி கேங் என சொல்லப்படும் மாயா கேங்கில் அவரது ரைட் ஹேண்டாக செயல்பட்டு வரும் பூர்ணிமா கதறி அழுததை பார்த்ததும் மாயாவுக்கு மனசு கேட்கவில்லை.
கட்டிப்பிடித்து தேற்றிய மாயா: நான் தான் இருக்கேன்ல ஏன் கண்ணீர் சிந்துற என கதறி அழுத மாயாவை கட்டிப்பிடித்து மாயா தேற்றிய காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இந்த வாரம் எவிக்ஷன் இல்லாத நிலையில், பிக் பாஸ் வீக்கெண்ட் எபிசோடு போர் அடிக்கும் என்பதால், கமல்ஹாசன் கடந்த முறை இதே போல எவிக்ஷன் இல்லாத நேரத்தில் அசீமை வறுத்தெடுத்தது போல நிக்சன் மற்றும் தரம் குறைவான போட்டியாளர்கள் அனைவரையும் வறுத்தெடுக்க உள்ளார். கடைசியில் போட்டியாளர்கள் தரமற்றவர்கள் என்பதை கமல் சாரே ஒப்புக் கொண்டது தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications











