அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "மாயா" குறும்படம்... தீனி பட இயக்குனரின் படைப்பில்!

சென்னை : வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருபவர் இளம் நடிகர் அசோக் செல்வன்.

Recommended Video

சூது கவ்வும் பாத்துட்டு கமல் சார் கூப்டாங்க | ACTOR ASHOK SELVAN INTERVIEW | FILMIBEAT TAMIL

அந்த வகையில் சமீபத்தில் வெளியான தீனி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது.

இந்த நிலையில் தீனி இயக்குனர் அனியுடன் மீண்டும் இணைந்து அசோக்செல்வன் நடித்துள்ள "மாயா" குறும்படம் கௌதம் மேனனின் ஒன்றாக யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது.

பீட்சா 2

பீட்சா 2

தமிழில் உள்ள இளம் நடிகர்களில் அதிக கவனம் பெற்று வருபவர் நடிகர் அசோக்செல்வன்.வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வரும் இவர் சூது கவ்வும் படத்தில் விஜய்சேதுபதியின் கேங்கில் ஒருவராக வெகுளித்தனமான கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பின் பீட்சா 2 மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார்.

தீனி

தீனி

தெகிடி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை திரைப்படமாக ஆனது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் அனி ஐ வி சசி இயக்கத்தில் தீனி என்ற மென்மையான கதையில் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தீனி வெளியானது. இயக்குனர் அனி ஐ வி சசி பிரபல மலையாள இயக்குனர் ஐ வி சசியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

"மாயா" குறும்படம்

இந்நிலையில் மீண்டும் தீனி பட இயக்குனருடன் அசோக் செல்வன் இணைந்துள்ள " மாயா" குறும்படம் இப்பொழுது கௌதம் மேனனின் ஒன்றாக யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. ஒரு திரைப்படம் உருவாவதற்கு ஒவ்வொரு இயக்குனர்களும் ஒரு மாயமான பிம்பங்களை தங்களுக்குள்ளாகவே உருவாக்கி கதையை எழுதுகின்றனர் என்பதை மிகவும் இயல்பாக மாயா குறும்படம் காட்டியுள்ளது.

மீண்டும் காதல் கதையை

மீண்டும் காதல் கதையை

காதல் படங்களை இயக்கும் ஒரு இயக்குனர் அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக ஒரு கதையை எழுத வேண்டும் என யோசிக்க, வேறு கதை எதுவும் தோன்றாமல் மீண்டும் காதல் கதையை எழுத ஆரம்பிக்க மாயா என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கதையை எழுதுகிறார். அந்த மாயா கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். ஒரே ஒரு வீட்டில் நடப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மாயா குறும்படம் கடந்த 2017ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்டது. சிகாகோ சவுத் ஏசியன் பிலிம் பெஸ்டிவலில் மிகச் சிறந்த குறும்படமாக வெற்றி பெற்றது.

கொரோனா மீட்பு பணிக்கு

கொரோனா மீட்பு பணிக்கு

மாயா குறும்படத்தை வெங்கட்பிரபு, அஷ்வத் மாரிமுத்து, ரிது வர்மா, அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா லட்சுமி,வாணி போஜன், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். தீனி பட இயக்குனரே இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் என்பதால் தீனி படத்தின் சாயல் பெரும்பாலும் இதில் உள்ளது என ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் மாயா குறும்படத்தின் மூலம் வரும் வருமானம் முழுவதும் கொரோனா மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X