Bigg Boss: ச்சீ.. இப்படியா பேசுவாங்க..? அர்ச்சனாவுக்கு வரும் கொலை மிரட்டல்கள்.. ஆறுதல் சொன்ன மாயா!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 பரபரப்பாக போய்க்கொண்டு இருந்தாலும், ஆட்டம் சுவாரஸ்யமாக இல்லை என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றது. வார இறுதியில், விஜய் சேதுபதி வரும் எப்பிசோட்கள் மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கின்றது என ரசிகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இப்படியான நிலையில் கடந்த சீசனின் டைட்டில் வின்னர், அர்ச்சனாவுக்கு இந்த சீசனில் விளையாடிக் கொண்டு இருக்கும் போட்டியாளர்களின் ரசிகர்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சி அளித்த நிலையில், இது தொடர்பாக அர்ச்சனாவுக்கு, கடந்த சீசன் போட்டியாளர் மாயா ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

வழக்கமாக, ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் கலந்து கொள்ளும்போது, அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து ரசிகர்கள், தங்களின் அபிமான போட்டியாளருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருவார்கள். ஒருகட்டத்தில் ஒரு போட்டியாளரின் ரசிகர்களுக்கும், மற்றொரு போட்டியாளரின் ரசிகர்களுக்கும் இடையே, இணையத்தில் வாக்குவாதம் ஏற்படுவதும் உண்டு. ஆனால் இம்முறை நடந்துள்ளது என்பது, அதையெல்லாம் கடந்து, கொலை மிரட்டல்கள்.

அதாவது, கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனாவின் காதலர் அருண் இந்த சீசனில் போட்டியாளராக விளையாடி வருகின்றார். அருணுக்கு ஆதரவாக, அர்ச்சனா தனது சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார். அருணுக்கும் முத்துக்குமரனுக்கும் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்படுகின்றது. இதனால் முத்துக்குமரன் ரசிகர்களுக்கும் அருண் ரசிகர்களுக்கும் இணையத்தில் அவ்வப்போது வாக்குவாதம் நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில், முத்துக்குமரன் ரசிகர்கள் அர்ச்சனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் மெசேஜ் அனுப்பியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

மாயா: இது தொடர்பாக அர்ச்சனா, சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இப்படியான நிலையில் கடந்த சீசனில் சிறந்த போட்டியாளரான, மாயா கிருஷ்ணன், அர்ச்சனாவுக்கு எக்ஸ் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், " அர்ச்சனா, உங்களுக்கு நடந்ததை நினைத்து நான் வருந்துகின்றேன். காவல்துறையில் நீங்கள் புகார் அளித்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் உங்களுக்கு ஆதரவாக உறுதுணையாக இருக்கின்றேன்.

பி.ஆர் டீம்: எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களிடம் பகிர நினைக்கின்றேன். அதாவது கடந்த சீசனில் நானும் எனது தோழிகளும் எங்களது குடும்பத்தினரும் ஒருவரது, " பி.ஆர்., குழுவினால்' பெரிதும் பாதிக்கப்பட்டோம். எங்களுக்கு இப்போதுவரை மிரட்டல்கள் இணையத்தில் வந்து கொண்டுதான் உள்ளது. வீட்டில் இருக்கும் குழந்தைகள் வரை அவர்கள் மிரட்டினார்கள். கொலை மிரட்டல்கள், வன்கொடுமை மிரட்டல்கள் என தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. அதற்கெல்லாம் காரணம், கடந்த சீசனில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளரின், "பி.ஆர். குழுதான்". எனது அனுபவத்தில் கூறுகின்றேன். நீங்கள் தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும்" என பதிவிட்டுள்ளார்.

காவல்துறை: அர்ச்சனாவின் இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்தாலும், மாயா இதில் அர்ச்சனாவைத்தான் மறைமுகமாக தாக்கியுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதேநேரத்தில் மாயாவின் பதிவுக்கு அர்ச்சனா தனக்கு வந்த மிரட்டல்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். அர்ச்சனாவின் இந்தப் பதிவு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் அர்ச்சனா தனது பதிவில், தமிழ்நாடு போலீஸை டேக் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











