For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மலையாள சினிமாவின் மாயக் கண்ணன்: 40வது பிறந்தநாள் கொண்டாடும் ரியல் பான் இந்தியா ஸ்டார் ஃபஹத் பாசில்!

  |

  திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி நவீன சினிமாவின் நடிப்பிற்கு அடையாளமாக ஜொலித்து வருகிறார் ஃபஹத் பாசில்.

  மலையாளம், தமிழ், தெலுங்கு என ரியல் பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் ஃபஹத் பாசிலுக்கு இன்று 40வது பிறந்தநாள்.

  இதனையடுத்து, திரை பிரபலங்களும் ரசிகர்களும் ஃபஹத் பாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

  குடும்பத்தில் ஒருவர் போல் உணர்கிறேன்..ரஜினியை பார்த்த ஃபீல் உள்ளது..விஜய் பற்றி புகழ்ந்த அமீர்கான் குடும்பத்தில் ஒருவர் போல் உணர்கிறேன்..ரஜினியை பார்த்த ஃபீல் உள்ளது..விஜய் பற்றி புகழ்ந்த அமீர்கான்

  கையெத்தும் தூரத்து

  கையெத்தும் தூரத்து

  1982ம் ஆண்டு கேரளாவில் பிறந்த ஃபஹத் பாசில், தனது தந்தையும் மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநருமான பாசிலின் துணையோடு 'கையெத்தும் தூரத்து' என்ற படம் மூலம் 2002ல் நடிகராக அறிமுகமானார். வழக்கமான சினிமா நாயகர்களுக்கான எந்தவித அடையாளங்களும் இல்லாமல் நடிக்கத் துவங்கியவர், நடிப்பிற்கான தனி அடையாளமாக பின்னாளில் கொண்டாடப்படுவார் என்பது அந்நேரம் யாரும் அறியாத புதிராக இருந்தது.

  தொடர்கதையான தோல்விகள்

  தொடர்கதையான தோல்விகள்

  ஆம்!, ஃபஹத் பாசிலின் ஆரம்பகால திரைப்படங்கள் மாபெரும் தோல்விகளை சந்தித்தன, போதாததற்கு அவர் நடிப்பின் மீது கடுமையான விமர்சனங்களும் வசைமாறி பொழியப்பட்டன. அவையனைத்தையும் மீறி ஃபஹத் இன்று சூடிக்கொண்டுள்ள வெற்றி இமயத்தின் உயரத்திற்கு ஒப்பானது. அன்று ஃபஹத்தை திரையில் பார்க்கவே விரும்பாத இயக்குநர்கள் எல்லாம், இன்றோ அவரது கால்ஷீட்டிற்காகக் காத்துக்கிடக்கின்றனர்.

  கண்கள் செய்யும் மாயம்

  கண்கள் செய்யும் மாயம்

  பஞ்ச் வசனம் பேசியபடி விரல்களால் கோதிவிட முடியாதபடியான சிகை அலங்காரம், ஏற்றம் கொண்ட நெத்தி, நீளமான மூக்கு, பெரிய கண்கள் என மிக சாதாரணமான முகப்பொலிவோடு கேமராவின் முன்னால் நின்ற ஃபஹத் அடுத்தடுத்து செய்ததெல்லாம் மாயாஜாலங்களுக்கு நிகரானது. காதல், கருணை, காமம், குரூரம், கோபம், வீரம் என நவரசங்களையும் தனது விழிகளால் நகலெடுத்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.

  விமர்சனங்களுக்கு சரியான பதிலடி

  விமர்சனங்களுக்கு சரியான பதிலடி

  தன்மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்ததோடு, விமர்சித்தவர்களையும் தனித்துவமான நடிப்பால் சுளுக்கெடுத்தார் ஃபஹத். எந்த மாதிரியான வெற்றிடங்களையும் கொண்டிராத மலையாள திரையுலகில், ஃபஹத் தனியொரு சிம்மாசனத்தை தனக்கென அமைத்துக்கொண்டார். அதனை அவர் தமிழ், தெலுங்கு உட்பட மற்ற மொழி திரையுலகிலும் விரித்துக்கொண்டே சென்றதுதான் மாபெரும் அசாத்தியங்கள் நிறைந்தது.

  மிஸ் பண்ணக் கூடாத படங்கள்

  மிஸ் பண்ணக் கூடாத படங்கள்

  22 பீமெயில் கோட்டயம், டையமண்டு நெக்லேஷ், அன்னாயும் ரசூலும், மஹேஷிண்டே பிரதிகாரம், டேக் ஆஃப், கும்பளாங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், ஜோஜி, மாலிக், தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், தெலுங்கில் புஷ்பா போன்ற படங்களில் ஃபஹத் தனது பாத்திரங்களை எப்படி வடிவமைத்தார், அதற்கு உயிர் கொடுத்தார் என்பதை, ஒவ்வொரு காட்சியையும் ஓராயிரம் முறைகள் உற்றுநோக்கினாலும் கண்டுணர முடியாத கலை நயங்கள்.

  திரையுலகின் மாபெரும் சகாப்தம்

  திரையுலகின் மாபெரும் சகாப்தம்

  தோல்விகளில் இருந்து மீள்வது கொஞ்சம் எளிமையானது என்றால், வானுயர சிறகடித்து பறப்பது ரொம்பவே அரிதானது. இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்தான் ஃபஹத்தின் வெற்றிகளும் அவர் தொட்ட உச்சங்களும். தொடர் தோல்விகளால் சினிமாவை விட்டே விலகிவிடலாம் என்றிருந்தார் ஃபஹத், ஆனால், இன்றோ அவரே நவீன சினிமாவில் நடிப்பிற்கான புது இலக்கணமாக சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.

  ரசிகர்களின் வாழ்த்து மழை

  ரசிகர்களின் வாழ்த்து மழை

  இந்நிலையில், இன்று 40வது பிறந்தநாள் கொண்டாடும் ஃபஹத் பாசில், இதுபோல் இன்னும் பல உயரங்களைத் தொட்டு, நடிப்பில் பல புதிய வரலாறு படைத்திட வேண்டும் என, அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

  English summary
  Mayak Kannan of Malayalam Cinema's: Real Pan India Star Fahadh Fasil Celebrates his 40th Birthday!
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X